விபத்துக்குள்ளான விமானத்தில் 16 பள்ளிச் சிறார்கள்
விமானத்தின் சிதிலங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அந்த விமானத்தில் ஜெர்மன் பள்ளி ஒன்றைச் சேர்ந்த 16 மாணவர்கள் இருந்தனர்கள் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனிடையே விமானம் பறத்தல் குறித்த தகவல்களை, தரவுகளை பதிவு செய்யும் “கருப்புப் பெட்டி”களில் ஒன்று விபத்து நடந்த இடத்தில் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பிரெஞ்சு உள்துறை அமைச்சர் பெர்னார்ட் கேஸிநேவ் தெரிவித்துள்ளார்.
ஆனால் இந்தப் பெட்டி, விமானம் பறக்கும்போது அது பறப்பது குறித்த தொழில்நுட்பத் தரவுகளை பதிவு செய்யும் கருவியா அல்லது கடைசி நேரத்தில் விமானிகளின் அறையில்(காக்பிட்) நடக்கும் உரையாடல்கள் மற்றும் ஒலிகளைப் பதிவு செய்யும் கருவியா என்பது தெளிவாகவில்லை.
விபத்துக்குள்ள விமானம் தூள்தூளாகச் சிதறியுள்ளதாகவும், எந்தவொரு பகுதியும் இதுவரை முழுமையாக கிடைக்கவில்லை என்று பிரெஞ்சு அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
விமானத்தில் பயணித்த 150பேரும் உயிரிழந்துவிட்டதாகக் கருதப்படுகிறது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply