அல்ப்ஸ் மலையில் விழுந்த விமானத்தின் ‘பிளாக் பாக்ஸ்’ சேதம்

பிரான்சில் அல்ப்ஸ் மலைகளில் செவ்வாய்க்கிழமை விழுந்து நொறுங்கிய ஜெர்மன் விங்ஸ் விமானத்தின் விமானியறை ஒலிப்பதிவுக் கருவி சேதமடைந்துள்ளது என பிரான்சின் உள்துறை அமைச்சர் பெர்னார் கஸெனவ் தெரிவித்துள்ளார். இருந்தபோதும் விமானம் விழக் காரணமென்ன என்று கண்டறிய முயலும் நிபுணர்கள் அந்த ஒலிப்பதிவுக் கருவியிலிருந்து சில தகவல்களையாவது பெற முடியும் என அவர் தெரிவித்துள்ளர்.விமானம் விழுந்ததில் பயணிகளும் சிப்பந்திகளுமாக அதிலிருந்த நூற்றைம்பது பேரும் உயிரிழந்தனர்.

சடலங்களைத் தேடும் பணி புதனன்று பொழுது விடிந்ததுமே ஆரம்பமானது.

ஏர்பஸ் ஏ 320 ரக விமானத்தின் சிதிலங்களை புலனாய்வாளர்களும் பொலிசாரும் ஆராய, ஒதுக்குப்புறமான அந்த மலைப்பகுதியில் ஹெலிகாப்டர்கள் சுற்றிப் பறந்துவருகின்றன.

விமானத்தை இயக்கிய ஜெர்மன்விங்ஸ் மலிவு விலை விமானப்போக்குவரத்து நிறுவனமாகும்.

பார்செலோனாவில் இருந்து டுஸ்ஸெல்டார்ஃப் சென்ற வழியில் இவ்விமானம் விழுந்து நொறுங்கியுள்ளது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply