சென்னை விமான நிலையத்தில் மாரடைப்பால் பலியான மலேசியப் பெண்மணி

பரபரப்பான சென்னை விமான நிலையத்தில், ஏர் ஏசியா விமானத்தில் பயணம் மேற்கொள்வதற்காக காத்திருந்த மலேசியப் பெண் பயணி ஒருவர் திடீர் மாரடைப்பால் பலியானதாக விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர். சென்னையிலிருந்து கோலாலம்பூர் செல்லும் விமானத்தில் பயணம் செய்வதற்காக, நேற்று மாலை 5 மணிக்கு விமான நிலையத்திற்கு வந்திருந்த ஈஷா பிண்டி விராசா(58), பாதுகாப்பு அனுமதி பெறும் பகுதியில் காத்துக் கொண்டிருந்த போது, திடீரென நெஞ்சைப் பிடித்துக் கொண்டு கீழே சரிந்தார். உடனடியாக அருகிலிருந்த போலீசார், மருத்துவக் குழுவிற்கு தகவல் அளித்தனர். அவர்கள் வந்து பரிசோதித்த போது அவர் மாரடைப்பால் பலியாகியிருப்பது தெரிய வந்தது.

அவரது பயண விவரங்களை சோதித்த அதிகாரிகள் அவர் மருத்துவ சிகிச்சைக்காக மூன்று வாரங்களுக்கு முன்னர் சென்னை வந்ததாக தெரிவித்தனர்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply