பாராளுமன்ற வளாகத்தில் வைக்கப்பட்டுள்ள லீ குவான் யூ உடலுக்கு ஆயிரக்கணக்கானோர் அஞ்சலி

‘சிங்கப்பூரின் தந்தை’ மற்றும் ‘நவீன சிங்கப்பூரின் சிற்பி’ என்று அழைக்கப்படும் முன்னாள் பிரதமர் லீ குவான் யூ உடல்நலக்குறைவு காரணமாக கடந்த திங்கட்கிழமை காலமானார். அவருக்கு வயது 91. அவரது மறைவையொட்டி சிங்கப்பூரில் 7 நாள் துக்கம் அனுசரிக்கப்படுகிறது. பொதுமக்கள் அஞ்சலி செலுத்த வசதியாக லீ குவான் யூவின் உடல் சிங்கப்பூர் பாராளுமன்ற வளாகத்திற்கு நேற்று கொண்டு வரப்பட்டது.

உடலின் மீது சிங்கப்பூர் நாட்டு தேசியக்கொடி போர்த்தப்பட்டு இருந்தது. பாராளுமன்ற வளாகத்தில் இருந்து 2 கிலோ மீட்டர் தூரத்திற்கு நீண்ட வரிசையில் காத்திருந்து பொதுமக்கள் லீ குவான் யூ உடலுக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்தினர். கூட்டம் அதிகமாக இருந்ததால் போலீசார் கூட்டத்தை கட்டுப்படுத்தினர். கூட்டநெரிசல் காரணமாக சிறிது போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது.

வரும் சனிக்கிழமை வரை பாராளுமன்ற வளாகத்தில் உடல் வைக்கப்படுகிறது. 29-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) அரசு மரியாதையுடன் இறுதிச்சடங்கு நடைபெறுகிறது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply