ஜெர்மன்விங்ஸ் விமானி வீட்டில் தடயங்கள்: பொலிஸ்

ஜெர்மன்விங்ஸ் விமானத்தை வேண்டுமென்றே மலையில் மோதியவராகத் தோன்றும் அதன் இரண்டாம் விமானி அந்த்ரேயாஸ் லுபிட்ஸின் வீட்டிலிருந்து கணினி உள்ளிட்ட பொருட்களை பறிமுதல் செய்துள்ளதாக ஜெர்மன் பொலிசார் கூறுகின்றனர்.அவற்றிலிருந்து சில துப்புகள் கிடைத்திருப்பதாக பொலிசார் கூறினாலும், அவை பற்றி அவர்கள் விவரம் தெரிவிக்கவில்லை. பொலிஸ் விசாரணைகள் தொடர்ந்துவரும் நிலையில், மனநல சிகிச்சைக்காக விமானிப் பயிற்சியை அவர் இடைநிறுத்தியிருந்தார் என என்று தற்போது விவரம் வெளியாகியுள்ளது.மன அழுத்தத்திற்காக இவர் சிகிச்சை பெற்றிருக்கலாம் என நம்பப்படுகிறது.

விமானியறையில் எல்லா நேரத்திலும் இரண்டு பேர் இருக்க வேண்டும் என்ற நிபந்தனையைக் கொண்டுவரும் விதமாக விமானப் போக்குவரத்து நிறுவனங்கள் தமது பாதுகாப்பு விதிகளை மாற்றத் துவங்கியுள்ளன.

அமெரிக்காவில் இந்த விதி ஏற்கனவே வழமையாக கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.

தாமதமின்றி தாங்களும் இந்த விதியை நடைமுறைப்படுத்துவோம் என ஜெர்மன் விமானப் பொக்குவரத்து சங்கம் தெரிவித்துள்ளது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply