ஹஜ் ஏற்பாட்டுக் குழு அமைச்சர் ஹலீம் தலைமையில் சவூதி பயணம்
ஹஜ் ஏற்பாடுகள் குறித்து ஆராய்வதற்காக முஸ்லிம் விவகார மற்றும் தபால் சேவை அமைச்சர் எம். எச். அப்துல் ஹலீம் தலை மையிலான குழு எதிர்வரும் 31 ஆம் திகதி சவூதி அரேபியா பயணமாகிறது. சவூதி அரேபியா ஹஜ் விவகார அமைச்சருக்கும் முஸ்லிம் விவகார அமைச்சருக்கு மிடையிலான சந்திப்பு ஏப்ரல் முதலாம் திகதி இடம்பெற இருப்பதாக முஸ்லிம் விவகார அமைச்சு தெரிவித்தது.இலங்கைக்கு வழங்கும் ஹஜ் கோட்டாவை அதிகரிப்பது குறித்தும் ஹஜ் யாத்திரையின்போது ஏற்படும் பிரச்சினைகள் மற்றும் அசெளகரியங்களை தீர்ப்பது குறித்தும் இதன்போது ஆராயப்பட உள்ளது.
அமைச்சர் ஹலீமுடன் முஸ்லிம் சமய கலாசார திணைக்கள பணிப்பாளர் எம். எச். எம். ஜெமீல், அமைச்சின் செயலாளர் மற்றும் ஹஜ் முகவர் சங்க பிரதிநிதிகள் இருவர் சவூதி அரேபியா பயணமாகின்றனர். முதற் தடவையாக இருந்த குழுவில் உலமா சபை பிரதிநிதி ஒருவரும் உள்ளடக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
கடந்த சில வருடங்களாக 2250 ஹஜ் யாத்திரிகர்களுக்கே ஹஜ் கடமையை நிறைவேற்றச் செல்வதற்கு கோட்டா வழங்கப்பட்டு வருகிறது. இதனை அதிகரித்து கூடுதலான யாத்திரிகர்களை ஹஜ் கடமையை நிறைவேற்றுவதற்காக அனுப்பவும் யாத்திரிகர்களுக்கு மேலும் வசதிகளை பெற்றுக் கொடுக்கவும் ஹஜ் விவகார அமைச்சரிடம் கோரப்படவுள்ளது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply