நண்பரால் தலையில் கோடரியால் தாக்கப்பட்ட சிறிசேனாவின் தம்பி சிகிச்சை பலனின்றி மரணம்
இலங்கை அதிபர் சிறிசேனாவின் தம்பியை அவருடைய நண்பரே கோடரியால் வெட்டினார். இதில் படுகாயம் அடைந்த அவர் மருத்துவமனையில் சிகிச்சை பலன் அளிக்காமல் மரணம் அடந்தார். இலங்கை அதிபர் மைத்ரிபால சிறிசேனாவின் தம்பி பிரியந்தா சிறிசேனா. இவர், பொலன்னருவா மாவட்டத்தில் மணல் குவாரி நடத்தி வருகிறார். பொலன்னருவாவில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். பிரியந்தாவின் நெருங்கிய நண்பர் லக்மல். அவரது வீடு, பாகமுனா என்ற இடத்தில் உள்ளது. நேற்று முன்தினம், பிரியந்தா அங்கு சென்றிருந்தார். அங்கு அவருக்கும், நண்பர் லக்மலுக்கும் இடையே திடீரென தகராறு ஏற்பட்டது. ஒரு கோடரியை எடுத்து, பிரியந்தாவின் தலையில் லக்மல் வெட்டினார். இதில், மண்டை உடைந்து ரத்தம் கொட்டியது.படுகாயம் அடைந்த பிரியந்தா, பொலன்னருவாவில் உள்ள ஒரு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். நேற்று முன்தினம் இரவு, அங்கிருந்து விமானம் மூலம் கொழும்பு நகருக்கு கொண்டு செல்லப்பட்டு, அங்குள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் மேல்சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டுவந்த நிலையில் சிகிச்சை பலன் அளிக்காமல் மரணம் அடைந்துவிட்டதாக போலீஸ் தெரிவித்துள்ளது.
இதற்கிடையே, பிரியந்தாவை வெட்டிய அவருடைய நண்பர் லக்மல் பாகமுனா போலீசில் சரண் அடைந்தார். அவரை போலீசார் கைது செய்தனர். அதிபர் சிறிசேனா தற்போது சீனாவில் சுற்றுப்பயணம் செய்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply