என் பெயரை யாரும் மறக்கமாட்டார்கள்: முன்னாள் காதலியிடம் கூறிய ஜெர்மன்விங்ஸ் துணை விமானி
என் பெயரை யாரும் மறக்கமாட்டார்கள் என்று விபத்துக்கு உள்ளான ஜெர்மன்விங்ஸ் விமானத்தின் துணை விமானி ஒரு ஆண்டுக்கு முன்பு தன்னிடம் கூறியதாக அவரின் முன்னாள் காதலி தெரிவித்துள்ளார். ஸ்பெயின் நாட்டின் பார்சிலோனா நகரிலிருந்து ஜெர்மனியின் டியூஸெல்டார்ப் நகரை நோக்கி சென்ற ஜெர்மன்விங்ஸ் பயணிகள் விமானம் பிரான்ஸ் நாட்டின் தென் பகுதியில் உள்ள ஆல்ப்ஸ் மலைத்தொடரில் பெலோன் பள்ளத்தாக்கில் விழுந்து நொறுங்கியது. இந்த விபத்தில் விமானத்தில் பயணம் செய்த 144 பயணிகள் உள்ளிட்ட 150 பேரும் பலியாகினர். துணை விமானி லுபிட்ஸ் விமானத்தை வேண்டுமென்றே திட்டமிட்டு மலையில் விமானத்தை மோதியிருக்கலாம் என்று விசாரணையில் தெரியவந்துள்ளது.இந்த நிலையில் துணை விமானி லுபிட்ஸின் முன்னாள் காதலி மரியா, புதிய தகவலை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார். தன் பெயரை யாரும் மறக்கமுடியாதபடி ஒரு செயலை செய்யப்போவதாகவும், அந்த செயல் விமான துறையையே மாற்றி அமைக்கப்போகிறது என்றும் லுபிட்ஸ் கூறியதாக ஒரு ஜெர்மன் நாளிதழுக்கு மரியா பேட்டி அளித்துள்ளார்.
மேலும் லுபிட்ஸ் திடீரென்று தூக்கத்தில் இருந்து எழுந்து நாம் கீழே விழுந்துகொண்டிருக்கிறோம் என்று சத்தம் போட்டிருப்பதாகவும் மரியா தெரிவித்துள்ளார். லூபிட்சும் மாரியாவும் 5 மாதங்கள் விமானத்தில் ஒன்றாக வேலை செய்திருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply