தேசப்பற்று என்ற போர்வையில் குழப்பங்களை ஏற்படுத்த முயற்சி :ரவூப் ஹக்கீம்
தேசப்பற்று என்ற போர்வையில் நாட்டில் குழப்பங்களை ஏற்படுத்தச் சிலர் முயற்சிக்கின்றனர். அதற்கு ஒருபோதும் இடமளிக்கக் கூடாது. வென் றெடுக்கப்பட்ட சமாதானத்தை தக்க வைத்துக்கொண்டு அபிவிருத்தியை ஏற்படுத்த நாம் முயல வேண்டும். உண்மையான தேசப்பற்று என்பது வென்றெடுக்கப்பட்ட சமாதானத்தை தக்க வைத்துக்கொள்வதே ஆகும் என முஸ்லிம் காஸ்கிரஸின் தலைவரும், அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.
பல்வேறு நபர்கள் தேவையற்ற பிரச்சினைகளை ஏற்படுத்த முயற்சிக்கின்றனர். இவ்வாறான பிரச்சினைகளை ஏற்படுத்துவது யார் என்பது அம்பலமாகியுள்ளது. இவர்கள் மீளவும் போர் தொடர்பிலான அச்சத்தை ஏற்படுத்த முயற்சிக்கின்றனர்.
தேசப்பற்றாளர் என தங்களை அடையாளப்படுத்திக் கொள்ளும் மோசடிக்காரர்களின் இறுதி சரணாகதியிடம் தேசப்பற்றை முன்னிலைப்படுத்தி குழப்பங்களை ஏற்படுத்துவதாகும் என அவர் தெரிவித்துள்ளார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply