அமெரிக்க அரசுத்துறைச் செயலர் இலங்கை ஜனாதிபதியுடன் தொலைபேசி உரையாடல்
அமெரிக்க அரசுத்துறைச் செயலர் ஹிலாரி கிளிண்டன் இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச அவர்களுடன் இன்று (மார். 13) தொலைபேசியில் உரையாடி அக்குரஸ்ஸவில் நடந்த பயங்கரவாதத் தாக்குதல் குறித்து தனது அனுதாபங்களைத் தெரிவித்துள்ளார்.
இலங்கை இப்போது பயங்கரவாதத்தை தோற்கடிக்கும் விளிம்பில் நிற்பதாகவும், நாட்டில் அமைதியை நிலைநாட்டி, மறுகட்டமைப்பு மற்றும் புனர்வாழ்வுக்கு வழிவகுக்கும் ஒரு பெரும் சந்தர்ப்பத்தை இது ஏற்படுத்தியுள்ளதாகவும் கிளிண்டன் அம்மையார் தெரிவித்துள்ளார்.
இராணுவத்தினால்,பொதுமக்கள் யாரும் தாக்கப்படமாட்டார்கள் என்று இலங்கையின் பாதுகாப்பு செயலர் உறுதியளித்திருப்பதை ஹிலாரி பாராட்டினார்.
விடுதலைப் புலிகள் தமது கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் ஒரு மிகச் சிறிய பகுதியில் எழுபதாயிரம் பேர் வரையிலானவர்கள் சிக்குண்டுள்ளனர் என்று கிளிண்டனிடம் இலங்கை ஜனாதிபதி தெரிவித்துள்ளார். அந்தப் பகுதியிலிருந்து விடுதலைப்புலிகளை அடுத்த சில நாட்களில் அகற்றிவிட முடியும் என்று அரசு நம்புவதாகவும் ஜனாதிபதி ராஜபக்ச கூறினார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply