ஏர் கனடாவின் ஏர்பஸ் ஏ320 விமானம் ஓடுபாதையில் மோதி விபத்து: 137 பயணிகள் தப்பினார்கள்
கனடாவில் ஏர் கனடா விமானம் தரையிறங்கும்போது மோசமான வானிலை காரணமாக ஓடுபாதையில் மோதி விபத்துக்கு உள்ளானது. இதில் 137 பயணிகள் காயம் ஏதுமின்றி உயிர் தப்பினார்கள். ஜெர்மன்விங்ஸ் பயணிகள் விமானம் விபத்து நடந்த சில நாட்களுக்குள்ளாகவே இந்த விபத்து நடந்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.கனடாவின் நோவா ஸ்காட்டியாவின் ஹாலிபேக்ஸ் விமான நிலையத்தில் ஏர் கனடாவிற்கு சொந்தமான ‘ஏர்பஸ் ஏ 320 தரையிறங்க முயன்றபோது அங்கு நிலவிய மோசமான வானிலையால் உடனே தரையிறங்க முடியாமல் வானிலேயே நீண்ட நேரம் பறந்து கொண்டிருந்தது. பின் தரையிறங்கியபோது விமானியால் ஓடுபாதையை தெளிவாக பார்க்க முடியவில்லை. இதனால் ஓடுபாதையில் மோதி விபத்து உள்ளானது.
இந்த விபத்தின்போது விமானத்தில் இருந்த 137 பேர் காயம் ஏதுமின்றி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்கள். ஆனால் விமானம் மோதியதால் விமான நிலையத்தின் மின்சார இணைப்புகள் பாதிக்கப்பட்டதால் மொத்த விமான நிலையமும் இருளில் முழ்கியது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply