சிங்கப்பூரில் இஸ்ரேல் அதிபருடன் நரேந்திரமோடி சந்திப்பு
மரணம் அடைந்த சிங்கப்பூர் முன்னாள் பிரதமர் லீ குவான் யூ (91) இறுதி சடங்கு இன்று நடந்தது. அதில் பங்கேற்க பிரதமர் நரேந்திரமோடி சிங்கப்பூர் சென்றுள்ளார். இந்த நிகழ்ச்சியில் இஸ்ரேல் அதிபர் ரிவ்லினும் பங்கேற்றார். அதற்காக சிங்கப்பூர் வந்த அவரை பிரதமர் நரேந்திரமோடி நேரில் சந்தித்தார். அப்போது அவர்கள் இரு நாடுகளுக்கு இடையேயான உறவு குறித்தும், அதை மேம்படுத்துவது குறித்தும் விவாதித்தனர். மேலும் இஸ்ரேலுக்கு வரும்படி பிரதமர் நரேந்திரமோடிக்கு அந்நாட்டு அதிபர் ரிவ்லின் அழைப்பு விடுத்தார்.இது இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு சார்பில் விடுக்கப்பட்ட அழைப்பு என தெரிவித்தார். அவரது அழைப்பை பிரதமர் மோடி ஏற்றுக் கொண்டார்.
ஆனால் இஸ்ரேல் செல்லும் தேதி முடிவு செய்யப்படவில்லை இரு நாட்டு தூதரக அளவில் விவாதித்து பின்னர் முடிவு செய்யப்படும். இந்த தகவலை வெளியுறவு துறை அமைச்சக செய்தி தொடர்பாளர் அக்பருத்தீன் தெரிவித்தார்.
முன்னதாக சமீபத்தில் நடந்த தேர்தலில் வெற்றி பெற்ற இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகுக்கு பிரதமர் நரேந்திரமோடி வாழ்த்துக்களை தெரிவித்தார்.
அவரை வாழ்த்தி டுவிட்டரில் ஹீப்ரு மொழியில் செய்தி அனுப்பியுள்ளார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply