சிரியா தாக்குதல் ஐஎஸ் தீவிரவாதிகள் முன்னேற்றம்
சிரியாவில் தாக்குதல் நடத்தி வரும் ஐஎஸ் தீவிரவாதிகள், அந்நாட்டின் இட்லிப் நகரைக் கைப்பற்றினர். இது சிரிய அரசுக்கு பெரும் பின்னடைவாக கருதப்படுகிறது. சிரியாவில் கடந்த 4 ஆண்டுகளுக்கும் மேலாக உள்நாட்டுப் போர் நடைபெற்று வருகிறது. இப்போரில் சுமார் இரண்டரை லட்சம் பேர் கொல்லப்பட்டுள்ளனர். கடந்த ஆண்டின் மத்தியில் தாக்குதல் நடத்த தொடங்கிய ஐஎஸ் தீவிரவாதிகளுடன் இணைந்து அல்கொய்தா அமைப்பின் துணை அமைப்பான நுர்ஸா அமைப்பும் தாக்குதல் நடத்தி வருகிறது.தீவிரவாதிகளுக்கு எதிரான தாக்குதலில் சிரிய அரசுக்கு அமெரிக்கா தலைமையிலான கூட்டு ராணுவப் படைகள் உதவின. இருப்பினும் தீவிரவாதிகளின் தாக்குதல்கள் அதிகரித்து வந்தன. கடந்த சில மாதங்களுக்கு முன் அந்நாட்டின் ரக்கா மாகாணத்தை தீவிரவாதிகள் கைப்பற்றினர். இது சிரிய அரசுக்குப் பெரிய தோல்வியாகக் கருதப்பட்டது. தீவிரவாதிகளுக்கு எதிராக குர்து படையினரும் போரில் ஈடுபட்டதால் சிரிய அரசுப் படைகள் சிறிது முன்னேறின. இருப்பினும், தீவிரவாதிகள் தற்போது இட்லிப் மாகாணத்தின் தலைநகரான இட்லிப்பைக் கைப்பற்றியுள்ளனர்.
இது குறித்து தீவிரவாதிகள் இணையதளத்தில் வெளியிட்டுள்ள காட்சிகளில், இட்லிப் நகரின் மையப் பகுதி வரை அவர்கள் தங்கள் ஆதிக்கத்தை விரிவுபடுத்தியிருப்பது தெளிவாகியுள்ளது. அந்நகரில் ஒட்டப்பட்டிருந்த சிரிய அதிபர் ஆசாத்தின் படங்களைக் கிழித்து எறிந்த தீவிரவாதிகள், அவர்களுடைய கொடியை ஏற்றி கொண்டாடி வருகின்றனர். இட்லிப் நகரை சிரிய அரசு இழந்தது மற்றொரு மிகப் பெரிய தோல்வியாகக் கருதப்படுகிறது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply