பிரதமரின் நடவடிக்கைக்கு தமிழ்க் கூட்டமைப்பு வரவேற்பு

பிரதமர் ரணில் விக்ரமசிங்க வின் வடக்கு விஜயத்தின் போது பெண்களைத் தலை மையாகக் கொண்ட குடும்ப ங்கள் மற்றும் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் தொடர் பான விடயங்களைக் கையாள் வதற்கு வெவ்வேறு செயலகங் களை கிளிநொச்சியில் அமைப்பதற்கு எடுத்திருக்கும் தீர்மானத்தை வரவேற்பதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித் துள்ளது.பிரதமர் ரணில் விக்ரமசிங்க நேற்று கிளிநொச்சிக்குச் சென்றிருந்தபோது, பெண்களைத் தலைமையாகக் கொண்டுள்ள குடும்பங்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நடவடிக்கைகளை மேற்கொள்ள கிளிநொச்சியில் செயலகமொன்றை அமைப் பதற்கு தீர்மானிக்கப்பட்டது.

இந்தத் தீர்மானத்தை வரவேற்பதாகத் தெரிவித்த தமிழ்த் தேசியக் கூட்டமைப் பின் பேச்சாளர் சுரேஷ் பிரேமச்சந்திரன், இது நல்ல தொரு ஆரம்பமாக அமையும் என்றும் கூறினார்.

அதேநேரம், யுத்தத்தால் பாதிக்கப்பட்ட குறிப்பாக அவயவங்களை இழந்தவர்கள் மற்றும் உளரீதியாகப் பாதிக்கப்பட்ட வர்களுக்கு உதவுவதற்கான பணிமனை யொன்றையும் கிளிநொச்சியில் அமைப்ப தற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதனூடாக உளரீதியாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிகளை வழங்க முடியும். இந்த நடவடிக்கைகளை வரவேற்பதாக சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார்.

இவ்வாறான பணியகங்கள் அமைக் கப்பட்டு அவை நடைமுறைப்படுத்தப் பட்டால் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட தரப்புக்களின் பல்வேறு பிரச்சினைகளை முடிவுக்குக் கொண்டுவருவதற்கு வழியை ஏற்படுத்த முடியும் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

அதுவும் அவ்வாறான பணிமனைகளை கிளிநொச்சியில் அமைத்திருப்பது வரவேற்கத்தக்கது என்றும் கூறினார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply