வடக்கிற்கு விசேட பிரதிநிதி : கிளிநொச்சியில் பிரதமர் ரணில் அறிவிப்பு
வடக்கில் காணப்படுகின்ற பிரச்சினை களை ஆராய்வதற்கும் தீர்ப்பதற்குமென கிளி நொச்சியில் பிரதமர் அலுவலகம் அமைக்கப் படவுள்ளது. இங்குள்ள நிலைமைகள் தொட ர்பில் ஆராய்ந்து ஆலோசனை வழங்கு வதற்காக விசேட பிரதிநிதியொருவரும் நியமிக்கப்படவுள்ளார் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். அடுத்த ஐந்து ஆண்டுகளில் கிளிநொச்சி முல்லைத்தீவு மாவட்டங்களில் விசேட வேலைத் திட்டங்களை மேற்கொண்டு மக்களுக்கான தேவைகளை நிறைவேற்றவுள்ளதா கவும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க குறிப்பிட்டுள்ளார்.வட பகுதிக்கான மூன்று நாள் உத்தியோக பூர்வ விஜயத்தை மேற்கொண்டுள்ள பிரத மர் ரணில் விக்கிரமசிங்க நேற்றைய தினம் கிளிநொச்சிக்கு வருகை தந்தார்.
அதனைத் தொடர்ந்து கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் மீள்குடியேற்றம்இபெண்கள் தலைமை தாங்கும் குடும்பங்களின் அபிவிருத்திஇபுனர்வாழ்வு அளிக்கப்பட்டவர்களுக்கு
செயற்றிட்டம், மற்றும் மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் ஆராயும் கூட்டம் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் இடம்பெற்றது.
இக்கூட்டத்தில் மீள்குடியேற்றம் புணர்வாழ்வு மற்றும் இந்து மதவிவகார அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன்இ மகளிர் விவகார பிரதி அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன்இ ஈ.பி.டி.பி பாராளுமன்ற உறுப்பினர் முருகேசு சந்திரகுமார்இ தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களான சுரேஸ் பிரேமச்சந்திரன்இசெல்வம் அடைக்கலநாதன்இவினோநோதராகலிங்கம்இ மாவட்ட செயலாளார் சுந்தரம் அருமைநாயகம்இ திணைக்களங்களின் தலைவர்கள்இ உயர் அதிகாரிகள் பொதுமக்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.
இக்கூட்டத்தின் போது யுத்தத்தின் பின்னரான சூழலில் கிளிநொச்சி மாவட்டத்தில் காணப்படும் பல பிரச்சினைகள் தொடர்பாக பிரதமரின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டது.
குறிப்பாக மீள்குடியேற்றம், கண்ணிவெடி அகற்றப்படாத நிலைமை, காணி உறுதிப்பத்திரங்கள் இன்மையால் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள், வீட்டுத்திட்டங்கள் கிடைக்கப்பெறாமை, விவசாய நிலங்கள் விடுவிக்கப்படடாமை, மாற்றுத்திறனாளிகளுக்கான வாழ்வாதார வசதிகள், புணர்வாழ்வு அழிக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்டவர்கள் சமுகத்தில் எதிர்நோக்கும் பிரச்சினைகள், உட்கட்டமைப்பு அபிவிருத்திகள் வாழ்வாதார உதவிகள் தொடர்பாக கவனத்திற்கு கொண்டுவரப்பட்டன.
இவற்றைக் கவனத்திற் கொண்ட பிரமர் ரணில் விக்கிரமசிங்க அவை தொடர்பாக தீர்வை எட்டுவது தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
2009 ஆண்டு இலங்கையில் கிளிநொச்சி, முல்லைத்தீவு ஆகிய வறிய மாவட்டங்களாக காணப்பட்டன. ஆனால் 2014 இல் மொனராகலை மாவட்டமே இலங்கையில் மிகவும் வறிய மாவட்டமாக காணப்படுகிறது.
யுத்தததனால் பாதிக்கப்பட்ட பெண்கள் சிறுவர்களின் நலன்களை பாதுகாக்கும் தேசிய ரீதியிலான மத்திய நிலையத்தின் தலைமை அலுவலகம் கிளிநொச்சியில் அமைக்கப்படும். இதன் மூலம் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட சிறுவர்கள்இபெண்களை தலைமையாக கொண்ட குடும்பங்களின் நலன்கள் பாதுகாக்கப்படவுள்ளன.
வட மாகாணத்தில் காணப்படுகின்ற பிரச்சினைகளை ஆராய்வதற்கும் தீர்ப்பதற்குமாக பிரதமர் அலுவலகம் ஒன்றினை அமைக்கவுள்ளோம். அத்துடன் இங்குள்ள நிலைமைகளை ஆராய்ந்து ஆலோசனை வழங்குவதற்காக விசேட பிரதிநிதியொருவர் நியமிக்கப்படவுள்ளார். இதன் மூலம் எதிர்காலத்தில் முன்னேற்றகரமான நிலைமைகளை நோக்கிச் செல்ல முடியும்.
பரவிபாஞ்சான் உள்ளிட்ட கிளிநொச்சியில் படையினரின் கட்டு்ப்பாட்டில் உள்ள காணிகள் விடயத்தில் விபரங்கள் ஆராயப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும். மீள்குடியேற்ற அமைச்சர் சுவாமிநாதன் அதற்கு பொறுப்பாக இருந்து அது தொடர்பான செயற்பாடுகளை மேற்கொள்வார். இரனைதீவின் நிலைமைகளை ஆராய்ந்து உரிய நடவடிக்கையையும் மீள்குடியேற்ற அமைச்சர் சுவாமிநாதனை மேற்கொள்வேண்டும்.
உள்ளக வீதிகள் புனரமைப்பிலும் நிதி அமைச்சசுடனும், வௌிநாட்டு நிதி மூலங்கள் ஊடாகவும் புனரமைப்பதுக்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும். அத்தோடு கிளிநொச்சி முல்லைத்தீவு மாவட்டங்களில் அடுத்து வரும் ஆண்டில் இருந்து விசேட வேலைத்திட்டங்களை முன்னெடுக்கவுள்ளன.
மாற்றுதிறனாளிகள் மற்றும் உளநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கான உளநல ஆற்றுகை பிராந்திய நிலையம் ஒன்றினை கிளிநொச்சியில் ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.
வீட்டுத்திட்டத்தில் புள்ளியிடல் முறை தொடர்பில் இந்திய அதிகாரிகளுடன் பேசப்படும் எனவும் மிகுதி வீட்டுத்திட்டம் தொடர்பில் ஏனைய நிதி வளங்களை பெற்றுக்கொள்வது பற்றியும் நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது.
வடக்கில் நிலவுகின்ற பிரச்சினைகள் தொடர்பில் ஆராய்ந்து நடவடிக்கைகள் எடுப்பதற்கு பிரதமர் அலுவலகத்தில் அதற்கென விசேட பிரதிநிதி ஒருவரை நியமித்து வடக்கில் காணப்படுகின்ற பிரச்சினைகள் தொடர்பில் கவனம் செலுத்தப்படவுள்ளது.
அடுத்த வாரமளவில் பாராளுமன்றத்தில் மக்கள் பிரதிநிதிகள் மற்றும் உரிய அமைச்சர்கள் ஆகியோருடன் குடிநீர் காணி விடயங்கள் என்பன கலந்துரையாடி தீர்வு எட்டுவதற்குரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளன என்றார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply