ஏப்ரல் முற்­ப­கு­தியில் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால பாகிஸ்தான் விஜயம்

ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன சில தினங்­களில் உத்­தி யோ­க­பூர்வ விஜயம் ஒன்றை மேற்­கொண்டு பாகிஸ்­தா­னுக்கு பய­ண­மா­க­வுள்ளார். அடுத்த மாத ஆரம்­பத்தில் இந்த விஜயம் அமையுமென அர­சாங்க தக­வல்கள் தெரி­வித்­தன. இந்த விஜ­யத்­தின்­போது பாகிஸ்தான் பிர­தமர் மற்றும் அமைச்­சர்கள் உள்­ளிட்ட பல்­வேறு தரப்­பி­ன­ரையும் ஜனா­தி­ பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன சந்­ தித்து பேச்­சு­வார்த்தை நடத்­த­வுள்ளார்.இரண்டு நாடு­க­ளுக்கும் இடை­யி­லான உறவை வலுப்­ப ­டுத்­து­வது குறித்தும் பொரு­ளா­தார மற்றும் வர்த்­தக தொடர்­பு­களை மேலும் விரி­வு­ப­டுத்­து­வது தொடர்­பா­கவும் இந்த விஜ­ய­த­்தின்­போது பேச்­சு­வார் த்தை நடத்­தப்­ப­ட­வுள்­ளது.

ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­னவின் பாகிஸ்­தா­னுக்­கான விஜயம் உறு­தி­ப­டுத்­தப்­பட்­டுள் ­ள­தா­கவும் எனினும் விஜ­யத்­துக்­கான திக­திகள் இன்னும் உறு­தி­ப­டுத்­தப்­ப­ட­வில்லை என்றும் வெளி­வி­வ­கார அமைச்சின் தக­வல்கள் தெரி­வித்­துள்­ளன.

ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன சீனா­வுக்கு உத்­தி­யோ­க­பூர்வ விஜயம் ஒன்றை மேற்­கொண்டு நேற்று நாடு திரும்­பினார். அத்­துடன் பெப்­ர­வரி மாதம் ஜனா­தி­பதி இந்­தி­யா­வுக்கும் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டிருந்தார்.

இந்நிலையிலேயே ஜனாதிபதி தலைமையிலான குழுவினர் பாகிஸ்தான் செல்லவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply