நாட்டின் பாதுகாப்பு கேள்விக்குறி ; தேசிய வளங்கள் தாரைவார்ப்பு : நாமல் ராஜபக்ஷ
நாட்டின் பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ள இன்றைய சூழலில் வளமிக்க அபிவிருத்திகள் நிறுத்தப்பட்டுள்ளதுடன் கடல் வளத்தையும் இந்த அரசு தாரை வார்த்து விட்டதாக நாமல் ராஜபக்ஷ எம்.பி. தெரிவித்தார். ஹம்பாந்தோட்டை சிரிபோபுர பிரதேசத்தில் (2015.03.30) ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்களுடனான கலந்துரையாடலிலேயே இவர் இவ்வாறு தெரிவித்தார். நாமல் ராஜபக்ஷ எம்.பி. இங்கு மேலும் தெரிவித்ததாவது, தற்பொழுதுள்ள அரசாங்கம் இதனைவிடவும் பொறுப்பாக செயற்படுமென தான் நம்புவதோடு கடந்த ஆட்சியின் போது நாம் எவ்வித அச்சமுமின்றி வாழ்ந்து வந்தோம்.
பல்வேறு முறைப்பாடுகள் எமக்கெதிராக முன்வைக்கப்பட்டிருந் தாலும் இவற்றின் உண்மை நிலையினை இந்த நாட்டு மக்கள் அறிவார்கள். ஜனாதிபதித் தேர்தலின் போது ஹம்பாந்தோட்டை மாவட்ட மக்கள் முன்னாள் ஜனாதிபதிக்கு கூடுதல் வாக்குகளை அளித்தார்கள்.
நாம் இம்மாவட்டத்தில் கடந்த காலங்களில் பல்வேறு அபிவிருத்தித் திட்டங்களை முன்னெடுத்து வந்தோம் இன்று அவை நிறுத்தப்பட்டுள்ளது. இவை பற்றி மக்கள் பாரிய எதிர்பார்ப் புகளுடன் இருந்தார்கள்.
புதிய வேலைத்திட்டத்தின் கீழ் எல்லாவற்றையும் பகிர்ந்துவிட்டார்கள். வடக்கு கடல் பிரதேசத்தையும் இந்தியாவுடன் பகிர்ந்தே மீன்பிடிக்கிறார்கள். அங்குள்ளவர்களுக்கு இங்கு வர முடியும். ஆனால் இங்குள்ளவர்கள் அங்கு செல்ல முடியாது எனவும் தெரிவித்தார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply