“புவி” என்ற புலி உறுப்பினர் கைது கார், கத்தி, வெளிநாட்டு நாணயங்கள், பொல்லுகள் மீட்பு
கார் மற்றும் போலி அடையாள அட்டைகள், கத்தி, இருப்புப் பொல்லுகள், மூன்று சாரதி அனுமதி பத்திரங்கள் மற்றும் வெளிநாட்டு நாணயங்களுடன் ‘புவி” என அழைக்கப்படும் விடுதலைப் புலிகள் இயக்கத்தின் பிராந்திய தலைவர் ஒருவர் உட்பட மூவர் மட்டக்களப்பு கல்லடி பிரதேசத்தில் வைத்து காத்தான்குடி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.கல்லடி பிள்ளையர் கோயில் வீதியில் குறித்த கார் பல நாட்களாக நிறுத்தி வைக்கப்பட்டிருப்பது குறித்து பொதுமக்கள் பொலிஸாருக்கு கொடுத்த தகவலையடுத்தே பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஏ.வெககெதர தலைமையிலான ஊழல் தடுப்பு பிரிவினர் மேற்கொண்ட தேடுதலின் போது மேற்படி நபர்கள் கைது செய்யப்பட்டனர்.
‘புவி” என அழைக்கப்படும் மகேந்திரன் புவிதரன் கொழும்பு பயங்கரவாத தடுப்பு பிரிவிற்கு மேலதிக விசாரணைகளுக்காக அனுப்பப்பட்டுள்ளதுடன்; மற்றறைய இருவரையும் எதிர்வரும் 10ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது
குறித்த நபர்களிடமிருந்து கைப்பற்றப்பட்ட பொருட்கள் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டுள்ளதுடன் கார் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கபர்பட்டுள்ளது. காத்தான்குடி பொலிஸார் மேலதிக விசாரணகளை மேற்கொண்டுள்ளனர்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply