19வது திருத்தம் கூட்டமைப்பும் உச்சநீதிமன்றில் மனு தாக்கல்

19வது அரசியலமைப்பு திருத்தத்திற்கு ஆதரவு தெரிவித்து தமிழ்த் தேசிய கூட்டமைப்பு இடையீட்டு மனுவொன்றை தாக்கல் செய்துள்ளது.கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனால் நேற்று இம்மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 19வது அரசியலமைப்பு திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து 11 மனுக்கள் இதுவரை தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையிலேயே சுமந்திரன் குறித்த திருத்த சட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து இடையீட்டு மனுவொன்றை தாக்கல் செய்துள்ளார்.மேலும் அரசியலமைப்பு திருத்தத்தை சட்டமாக்குவதற்கு சர்வஜன வாக்கெடுப்பொன்று அவசியமில்லை என தான் வாதாடப் போவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

19வது அரசியலமைப்பு தொடர்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்கள் மீதான விசாரணைகளை மேற்கொள்ள மூவரடங்கிய நீதிபதிகள் குழாம் அமைக்கப்பட்டுள்ளதுடன், இன்றைய தினம் விசாரணைகள் நடைபெறவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply