மன்மத வருட சித்திரைப் புத்தாண்டு தமிழர்கள் வாழ்வில் முத்திரை பதிக்க வழிசமைக்கட்டும்! புத்தாண்டு வாழ்த்துச் செய்தியில் ப. உதயராசா
மலரப்போகும் இனிய மன்மத வருட சித்திரைப்புத்தாண்டு தமிழர்கள் வாழ்வில் வரலாற்று வாழ்வுரிமைக்கான முத்திரையினை பதிக்க வேண்டி மகிழ்ச்சியுடன் வரவேற்போம் என சிறிரெலோ கட்சியின் செயலாளர் நாயகம் ப.உதயராசா விடுத்துள்ள புத்தாண்டு வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.
அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
ஒவ்வொரு வருடமும் தவறாமல் வந்து போகும் பண்டிகைகளை புதுபொலிவுடனும் நம்பிக்கையுடனும் வரவேற்பது தமிழ் மக்களாகிய எங்களின் பாரம்பரிய வழக்கம்.
அந்தவகையில் இவ்வருடம் சிறையில் வாடும் இளைஞர் யுவதிகளிற்கான பொதுமன்னிப்பினை சனாதிபதி வழங்கி விடுதலை செய்வார் என்ற நம்பிக்கையுடனும் தமிழ் மக்கள் சுதந்திரமாகவும் ஆரோக்கியமாகவும் வாழ்வதற்கான சூழ்நிலையினை மன்மத வருடம் உருவாக்கி தர வேண்டும் என்ற பிரார்த்தனையுடனும் சித்திரைபுத்தாண்டினை வரவேற்போம்.
தமிழர்களுக்கான கலாச்சார பண்பாட்டு விழுமியங்கள் தனித்துவமானவை. அவற்றினை பேணிப்பாதுகாப்பது அவசியம் என்பதுடன் ஒருவருக்கொருவர் மனம் திறந்து பேசி இன மத மொழிகளை கடந்து ஜீவகாருண்ணியத்தினை வளர்த்து ஒற்றுமையுடன் வாழ இறைவனை பிரார்த்திப்பதுடன் சிங்கள மக்களும் இப்புனித புத்தாண்டில் மனிதாபிமானத்துடனும் சகோதரத்துவத்துடனும் வாழ்வதற்கான நன்நாளாக இந்நாளை கொண்டாடி மகிழ்ச்சியுற வேண்டும் எனவும் அந்த வாழ்த்துச்செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மூலம்/ஆக்கம் : TELOnewsYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply