ஈரான் மீதான ஏவுகணை சப்ளை தடையை நீக்கியது ரஷியா
ஈரானுக்கு எஸ்–300 ரக ஏவுகணைகளை ரஷியா விற்பனை செய்து வந்தது. இது ஜெட் விமானங்களையும், தாக்குதல் நடத்த வரும் மற்ற ஏவுகணையும் தாக்கி அழிக்கக்கூடிய திறன் படைத்தது. அணு ஆயுத பிரச்சனையில் ஈரான் மீது ஐ.நா. சபை பொருளாதார தடை விதித்தது. அதை தொடர்ந்து கடந்த 2010–ம் ஆண்டில் இருந்து ஈரானுக்கு எஸ்–300 ரக ஏவுகணை சப்ளை செய்வதை ரஷியா நிறுத்தியது.
இந்த நிலையில் தற்போது அணு ஆயுத நடவடிக்கையை நிறுத்தி வைப்பதாக ஈரான் உறுதி அளித்துள்ளது. அதற்கான ஒப்பந்தமும் கையெழுத்தாகியுள்ளது.
அதை தொடர்ந்து, எஸ்–300 ரக ஏவுகணைகள் மற்றும் அவற்றை விண்ணில் ஏவக்கூடிய கருவிகளையும் ஈரானுக்கு வழங்க அதற்கான தடையை நீக்க ரஷியா முடிவு செய்துள்ளது. இதை ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் அறிவித்துள்ளார்.
இதற்கு அமெரிக்காவும், இஸ்ரேலும் அதிருப்தி தெரிவித்துள்ளனர். இதன் மூலம் ஈரான் தனது அணு உலைகளை குண்டு வீச்சில் இருந்து காப்பாற்றி கொள்ள முடியும் என கூறியுள்ளனர். அதற்கு பதில் அளித்துள்ள ரஷிய ராணுவ மந்திரி செர்ஜிலாவ் ரோவ், இந்த ஏவுகணை பாதுகாப்பானது.
இஸ்ரேல் உள்ளிட்ட எந்த நாட்டின் பாதுகாப்புக்கும் இது அச்சுறுத்தலாகாது என தெரிவித்துள்ளார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply