இந்தியாவிற்கு செல்ல விரும்பும் இலங்கை பயணிகள் விமான நிலையத்தில் விசா பெற்றுக்கொள்ள முடியும்!
இந்தியாவிற்கு செல்ல விரும்பும் இலங்கை பயணிகள் விமான நிலையத்தில் வைத்தே இந்திய விசாவினைப் பெற்றுக்கொள்ள முடியும். கடந்த மாதம் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இலங்கை விஜயத்தின் போது விசா தொடர்பாக வழங்கிய உறுதிமொழிக்கு அமைய இந்த சந்தர்ப்பம் கிடைக்கப் பெற்றுள்ளது. இந்தியா 43 நாடுகளுக்கு ‘ஒன் அரைவல் விசா’ அதாவது விமான நிலையத்தில் வீசா பெற்றுக்கொள்வதற்கான அனுமதியை வழங்கியிருந்தது.அதனடிப்படையில் இலங்கை 44 ஆவது நாடாக அந்தப் பட்டியலில் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளது.
அதன்படி, இந்தியாவின் புதுடில்லி, மும்பை, கொல்கத்தா, ஹைதராபாத், பெங்களூர், திருவனந்தபுரம், கொச்சின் மற்றும் கோவா ஆகிய விமான நிலையங்களில் வைத்து இலங்கையர்கள் 30 நாட்களுக்கு விசா பெற்றுக்கொள்ள முடியும்.
இந்த சந்தர்ப்பத்தை இலங்கையர்களுக்கு வழங்குவதாக இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டிருந்த போது உறுதியளித்திருந்தார்.
அந்த உறுதிமொழிக்கு அமைவாகவே இந்த திட்டம் நடைமுறைக்கு வரும் வகையில் அறிமுகப்படுத்தப்பட்டிருக்கின்றது.
இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை இயற்றிய டொக்டர் அம்பேத்கரின் ஜனன தினத்தை முன்னிட்டு இச் சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளதாக இந்திய அரசாங்கம் அறிவித்துள்ளது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply