லிபியாவில் கடலில் படகு கவிழ்ந்து விபத்து 400-க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு
லிபியா கடல்பகுதியில் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 400-க்கும் மேற்பட்ட புலம்பெயர்ந்தோர் உயிரிழந்தனர் என்று சம்பவத்தில் உயிர் பிழைத்தோர்கள் தெரிவித்து உள்ளனர். லிபியாவில் தொடர்ந்து வன்முறை மற்றும் குழப்பமான நிலைமை நீடிப்பதன் காரணமாக அங்கியிருந்து மக்கள் ஐரோப்பிய நாடுகளுக்கு சட்டவிரோதமாக குடிபெயர்ந்து வருகின்றனர். கடல் வழியாக படகில் அவர்கள் ஐரோப்பிய நாடுகளுக்கு பயணம் செய்யும் போது விபத்துக்குள் சிக்குவது வழக்கமாகவே உள்ளது. தற்போது அதுபோன்று கோரச் சம்பவம் அரங்கேறி உள்ளது. லிபியாவில் இருந்து 500-க்கும் மேற்பட்டோர் பெரிய படகில் இத்தாலிக்கு சென்று உள்ளனர். லிபியாவில் இருந்து புறப்பட்ட அவர்களது படகு சுமார் 24 மணி நேரங்களில் நேற்று கடலில் விபத்துக்குள் சிக்கியது. படகு மூழ்கியது.
இதுதொடர்பாக தகவல் அறிந்த இத்தாலி கடற்படையினர் அவர்களை மீட்பதற்கான பணியில் தீவிரம் காட்டினர். முன்னதாக இத்தாலி கடற்படையினர் பேசுகையில், விபத்துக்குள் சிக்கிய படகில் இருந்து சுமார் 144 பேரை மீட்டு உள்ளோம், சடலங்களும் மீட்கப்பட்டு உள்ளது. என்று தெரிவித்தனர். சர்வதேச குடிபெயர்ந்தோர்களுக்கான அமைப்பு தெரிவித்து உள்ள தகவலில், இத்தாலியின் தெற்கு பகுதியில் உள்ள ரெக்கியோ காலபெரியா நகருக்கு சிறுவர்கள் உள்பட சுமார் 144 பேர் வந்து இறங்கினர். என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. அமைப்பின் செய்தியாளர் பிளாவியோ டி ஜியாகோமோ பேசுகையில்,
எங்களுடைய அமைப்பு உயிர்பிழைத்தோர்களிடம் சம்பவம் தொடர்பான விபரங்களை கேட்டு அறிந்தது, அவர்கள் படகில் சுமார் 500 முதல் 550 பேர் வரையில் பயணம் செய்தனர் என்று தெரிவித்து உள்ளனர். எப்படி படகு விபத்துக்குள் சிக்கியது என்பதை தெரிந்துக்கொள்ள தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகிறோம். இத்தாலி மீட்பு குழுவினர் பார்த்ததும் வேகமாக சென்றதன் காரணமாக படகு விபத்துக்குள் சிக்கியிருக்கலாம். என்று தெரிவித்து உள்ளார். கடந்த வெள்ளிக்கிழமையில் இருந்து மட்டும் மீட்பு குழுவினர் சுமார் 8 ஆயிரம் பேரை மீட்டு உள்ளதாக தெரிவித்து உள்ளனர். தொடர்ந்து அங்கு மீட்பு பணிகள் நடைபெற்று வருகிறது.
இந்த 2015-ம் ஆண்டில் மட்டும் இதுவரையில் சுமார் 15,000 பேர் இத்தாலிக்கு வந்து உள்ளனர் என்று அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர். லிபியாவில் இருந்து ஐரோப்பிய நாடுகளுக்கு மக்கள் புலம்பெயர்வது, அவர்களுக்கு உதவி செய்பவர்களுக்கு பெரும் லாபகரமாக அமைந்து உள்ளது. படகில் அவர்கள் எல்லையை கடக்க சுமார் 500 முதல் 1000 வரையிலான அமெரிக்க டாலர்கள் பணம் பெறப்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply