புது தில்லியில் தரையிறங்கினார் ராகுல்
அரசியல் வாழ்க்கையில் இருந்து ஒதுங்கி கடந்த 56 நாட்களாக நீண்ட நாள் விடுப்பில் தலைமறைவாக இருந்த காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர் ராகுல் இன்று தில்லி விமான நிலையத்தில் வந்திறங்கினார். கடந்த 56 நாட்களாக காங்கிரஸ் கட்சித் தலைவர்கள் முன் எழுப்பப்பட்ட பல்வேறு கேள்விகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் தனது தலைமறைவு வாழ்க்கையை முடித்துவிட்டு இன்று தில்லி திரும்பினார் ராகுல்.
பாங்காங்கில் இருந்து தில்லி வந்த தாய் ஏர்வேஸ் விமானத்தில் முற்பகல் 11 மணியளவில் தில்லி வந்து சேர்ந்தார் ராகுல். அங்கிருந்து அவர் துக்ளக் பகுதியில் உள்ள தனது வீட்டுக்கு சென்றார்.
அதற்கு முன்பாக, காங்கிரஸ் தலைவர் சோனியா தனது துக்ளக் பகுதி வீட்டுக்கு சென்றார். அவரைத் தொடர்ந்து ராகுலின் சகோதரி பிரியங்காவும் வீட்டுக்கு வந்தார்.
எங்கிருக்கிறார், எப்படி இருக்கிறார் என்று எந்த தகவலும் இல்லாததால், தலைமறைவாகிவிட்டார், கல்யாணம் செய்து கொண்டார் என்றெல்லாம் புரளிகளில் அடிபட்டு, போஸ்டர்கள் ஒட்டப்பட்ட ராகுல் காந்தி இன்று இறுதியாக தில்லிக்கு திரும்பிவிட்டார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply