தமிழ்ப்பெண்கள் பாலியல் கொடுமை குறித்து விசாரிக்க வேண்டும்: ஐ.நா. பொது செயலாளர் கோரிக்கை

இலங்கை இறுதிக் கட்ட போரில் நடந்த அத்துமீறல்கள் குறித்து ஐ.நா. பாதுகாப்பு சபைக்கு பொது செயலாளர் பான் கீ மூன் அளித்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:–இலங்கை அரசாங்கத்தை பொறுத்தவரை கடந்த ஐந்து ஆண்டு காலத்தில் மீள்குடியேற்றம் உட்பட பல்வேறு முன்னேற்ற நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. எனினும் இலங்கை ராணுவத்தால் மேற்கொள்ளப்பட்ட பாலியல் வன்முறை குற்றங்கள் தொடர்பாக அரசாங்கம் உரிய விசாரணைகளை முன்னெடுக்க தவறியுள்ளது.

அத்துடன் போருக்கு பின்னரான ஐந்து ஆண்டுக் காலப்பகுதியில் கடத்தல்கள், தடுத்து வைத்தல், பாலியல் அத்துமீறல், பாலியல் வன்முறைகள் போன்றவை அதிகரித்திருந்தன.

ராணுவமயத் திட்டத்தின் கீழ் பெண்கள் மற்றும் சிறுமிகள் மீது பாலியல் வன்முறைகள் மேற்கொள்ளப்பட்டன. இறுதிகட்ட போருக்குப் பின்னும் தமிழ் பெண்கள் மீது இலங்கைப் படையினர் பாலியல் வன்முறைகளை மேற்கொண்டனர். 2014–ம் ஆண்டு தடுப்பில் இருந்து விடுவிக்கப்பட்ட பெண்களின் சாட்சியங்கள் இதனை நிரூபிக்கின்றன.

இனவாத அடிப்படையில் இடம்பெற்ற இந்த வன்முறைகள், விடுதலைப் புலிகளுடன் தொடர்புபட்டவர்கள் என்ற அடிப்படையில் தமிழ் பெண்கள் மீது நிகழ்த்தப்பட்டன.

இந்த நிலையில் இலங்கையில் புதிதாக பதவியேற்றுள்ள அரசாங்கம் குறித்த படையினரால் மேற்கொள்ளப்பட்ட பாலியல் வன்முறைகள் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்க வேண்டும்.

அத்துடன் பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய மாற்று நடவடிக்கைகளையும் பொருளாதார முன்னேற்றங்களையும், குறிப்பாக போரின் போது கணவர்மாரை இழந்த பெண்களை தலைமையாக கொண்ட குடும்பங்களுக்கும் உதவிகளை வழங்க வேண்டும்.

இவ்வாறு பான் கீ மூன் கூறியுள்ளார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply