மஹிந்த தலைமையில் மாற்றுக்குழுவை அமைத்து போட்டியிடுவதற்கும் நாம் பின்னிற்கமாட்டோம் : வாசு
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தலைமையில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியென்று மாற்றுக்குழுவை அமைத்து பொதுத் தேர்தலில் போட்டியிடுவதற்கும் பின் நிற்கப் போவதில்லை எனத் தெரிவித்த முன்னாள் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார எதிர்க்கட்சித் தலைவராக தினேஷ் குணவர்தனவே நியமிக்கப்படுவாரென்றும் உறுதியுடன் தெரிவித்தார்.
இது தொடர்பில் வாசுதேவ நாணயக்கார எம்.பி. மேலும் தெரிவிக்கையில்,
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னாள் ஜனாதிபதிக்கு ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பொதுத் தேர்தலில் வாய்ப்பளிக்கபடும் எனத் தெரிவித்துள்ளார்.
இதனை வரவேற்கின்றோம். அவ்வாறு அம்முன்னணியில் போட்டியிடுவதற்கான வாய்ப்புக்கள் ஏதாவது ஒரு விதத்தில் பறிக்கப்பட்டால் இந்தியாவில் இந்திரா காங்கிரஸைப் போன்று இங்கும் மகிந்த ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி என்ற பெயரில் மாற்றுக் குழுவை (கட்சியை) அமைத்து பொதுத் தேர்தலில் மகிந்த ராஜபக்ஷவை களமிரக்குவோம்.
இவ்வாறான நடவடிக்கையை முன்னெடுப்பதில் நாம் பின்நிற்க மாட்டோம். அதேவேளை பொதுத்தேர்தலில் போட்டியிடும் போது பிரதமர் வேட்பாளரென்று எவரையும் களமிருக்குவதில்லை. தேர்தல் முடிந்த பின்னரே பிரதமர் யாரென்று ஜனாதிபதி தெரிவு செய்வார்.
முன்னாள் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்டு பாராளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்படுவதென்பது கெளரவக் குறைச்சலல்ல. பாராளுமன்ற உறுப்பினர் பதவியென்பது மக்களால் தெரிவு செய்யப்படுவது. எனவே ஜனாதிபதி பதவியை மட்டும் உயரத்தில் வைத்துப் போற்றக் கூடாது.
தினேஷ் குணவர்தன எம்பியை எதிர்க்கட்சித் தலைவராக நியமிக்குமாறு 70க்கும் மேற்பட்ட எம்.பி.மார் கையெழுத்திட்டு தமது ஆதரவை தெரிவித்துள்ளனர்.
இதில் சில சத்தியக் கடதாசிகளையும் கையெழுத்திட்டு வழங்கியுள்ளனர். எனவே நிச்சயம் எதிர்க்கட்சித் தலைவராக தினேஷ் குணவர்தன நியமிக்கப்படுவார் என்பதில் உறுதியாக இருக்கின்றோம்.
எம் பிக்களான நிமால் சிறிபால டி சில்வாஇ சுசில் பிரேம ஜயந்த ஆகியோர் அமைச்சுப் பதவிகளை பெற்றுக் கொள்ளாவிட்டாலும் அவர்களை இந்த அரசுடன் இணக்கப்பாட்டுடன் செயல்பட்டு வருகின்றனர்.
எனவே அவர்களுக்கு எதிர்க்கட்சித் தலைவர் பதவி வகிக்க முடியாது அதற்கான தார்மீகக் கடப்பாடும் கிடையாது என்றும் வாசுதேவ நாணயக்கார எம்.பி. தெரிவித்துள்ளார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply