தந்தையை கொன்ற மகன் ரயிலில் பாய்ந்து தற்கொலை
பொலன்னறுவை, புதிய நகர பிரதேசத்தின் கனன்கொல்லையில் தந்தையொருவர் அவரது மகனின் தாக்குதலுக்கு உள்ளாகி உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் நேற்று காலை இடம்பெற்றதாகவும் கூரிய ஆயுதம் ஒன்றை பயன்படுத்தி தந்தையை கொலை செய்துவிட்டு தப்பிச் சென்ற மகன் வெலிக்கந்தை பிரதேசத்தில் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்டுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகத்தின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
சம்பவம் தொடர்பில் மேலும் அறிய முடிவதாவது,
பொலன்னறுவைஇ கனன்கொல்ல பிரதேசத்தில் 58 வயதான நபர் ஒருவருக்கும் அவரது 21 வயதான மகனுக்குமிடையே நேற்று காலை வாக்கு வாதம் ஒன்று ஏற்பட்டுள்ளது.
வாக்குவாதம் முற்றவே கூரிய ஆயுதம் ஒன்றினை கையிலெடுத்துள்ள மகன் தனது தந்தை மீது சரமாரியான தாக்குதலை நடத்தியுள்ளான். இதன் காரணமாக தந்தை ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளார். தந்தை உயிரிழந்ததை தொடர்ந்து கொலை சந்தேக நபரான மகன் ஊரை விட்டு தப்பியோடியுள்ளார்.
எவ்வாறாயினும் நேற்று பிற்பகல் நீதிவான் நீதிமன்ற நீதிபதி கொலை தொடர்பில் ஸ்தலத்திற்கு சென்று பார்வையிட்ட பின்னர் சந்தேக நபரை கைது செய்ய பொலிஸாருக்கு உத்தரவிட்டார். இந் நிலையில் தந்தையின் சடலமானது பொலன்னறுவை போதனா வைத்தியசாலையில் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply