விகிதாசார தேர்தல் முறை ஒழிப்பு ஐ.தே.க உடந்தையாக இருப்பது கட்சிக்குச் செய்யும் துரோகம் : விக்ரமபாகு கருணாரத்ன
விகிதாசார தேர்தல் முறையை மாற்றியமைப்பதற்கு ஐக்கிய தேசியக்கட்சி உடந்தையாக இருப்பது கட்சிக்கு செய்யும் துரோகம் என்றும் இந்த தேர்தல் முறையை ஒழிப்பது பாதையில் இறங்கி யுத்தம் செய்வது போன்று பாரதூரமான விடயமென்றும் நவசமசமாஜக்கட்சியின் தலைவர் விக்ரமபாகு கருணாரத்ன தெரிவித்தார். விகிதாசார தேர்தல் முறையை பாதுகாப்போம் என்ற தொனிப் பொருளில் இம்மாதம் 19ஆம் திகதி பிரதான கட்சிகள் தவிர்ந்த ஏனைய கட்சிகளுடன் பேச்சுவார்த்தை யொன்றில் ஈடுபட உள்ளதாகவும் அவர் கூறினார்.
ஜனாதிபதி ஜே.ஆர் ஜயவர்தன வினால் கொண்டுவரப்பட்ட இத்தேர்தல் முறையானது மக்களின் சிவில் உரிமையை பாதுகாக்கும் வகையில் உருவாக்கப்பட்டதாகும். சாதாரண மக்களின் அடிப்படை உரிமையை வென்றெடுக்க ஐக்கிய தேசியக்கட்சியின் தலைவர் உருவாக்கிய இந்த தேர்தல் முறை ஒழிப்புக்கு கட்சி ஒத்துழைப்பு வழங்குவது தலைவருக்கு செய்யும் துரோகம் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
கொழும்பு 2இல் அமைந்துள்ள நவசமசமாஜக்கட்சி தலைமையகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,
மாகாணசபைத் தேர்தலின் மூலம் தமிழ் பேசும் மக்களின் உரிமைகளைப் பெற்றுக் கொள்வதற்கு சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக் கொடுத்த ஜனாதிபதி ஜே.ஆர்.ஜயவர்தன, தேர்தலில் வாக்க ளிப்பதற்கு சந்தர்ப்பம் வழங்கப்பட்டதால் இந்நாட்டில் உள்ள சகலரும் இலங்கைப் பிரஜைகளாக மாறினார்கள்.
தமிழ், சிங்களம் ஆகிய இரண்டு மொழிகளையும் அரச மொழியாக்கிய ஜனாதிபதி ஜே.ஆர்.ஜயவர்தன, நீதியான விகிதாசார தேர்தல் முறையை அறிமுகப் படுத்தி மக்களின் அடிப்படை உரிமைகளையும் பெற்றுக் கொடுத்தார்.
இவ்விதம் உருவாக்கப்பட்ட விகிதாசார தேர்தல் முறையை ஒழிப்பதற்கு எதிராக போராட்டம் நடத்த வேண்டும்.
மக்களின் உரிமைகள் மீறப்படும் போது அதற்கு எதிராக எமது கட்சி நடவடிக்கை எடுப்பதற்கு தயக்கம் காட்டாது.
விகிதாசார தேர்தல் முறை மாற்றம் தொடர்பாக பிரதான கட்சிகள் தவிர்ந்த ஏனைய கட்சிகளுடன் பேச்சுவார்த்தை யொன்றை நடத்த உள்ளோம்.
இம்மாதம் 19ஆம் திகதி நடைபெறும் இப்பேச்சு வார்த்தையில் விகிதாசார தேர்தல் முறையை தொடர்ந்தும் வைத்திருப்பதற்கு எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் என்ன என்பது தொடர்பாகவும் எமது அடிப்படை உரிமைகள் மீறப்படும் போது அதற்கு எதிராக எவ்விதம் முகம் கொடுப்பது என்பது தொடர்பாகவும் ஆராய உள்ளோம்.
19ஆவது திருத்தச் சட்டத்தில் தேர்தல் முறை மாற்றத்தையும் கொண்டுவருவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. விருப்பு வாக்கு முறை தேர்தல் முறையுடன் தொடர்பில்லை.
இது விகிதாசார தேர்தலில் உள்ள ஒரு பகுதியும் இல்லை. இது இல்லாமல் தான் ஏனைய நாடுகளில் காணப்படு கின்றன.
இந்த தேர்தல் முறையை பாதுகாப் பதற்கு நாம் அனைவரும் ஒன்றிணைய வேண்டும். இதனை மாற்றுவது பாரிய துரோகமான விடயமாகும். இந்த விடயம் தொடர்பில் நாம் நீதிமன்றத்திடம் எவ்வாறு செல்வது. அவ்வாறே சர்வதேச நீதிமன்றத்தில் முறையிடுவது போன்ற விடயங்கள் குறித்து நாம் ஆராய உள்ளோம்.
இந்த தேர்தல் முறை மாற்றத்துக்கு ஐக்கிய தேசியக்கட்சி உடந்தையாக இருப்பது கட்சிக்கு செய்யும் துரோகமாகவே கருத வேண்டியுள்ளதுடன் இதற்கு எதிராக போராட்டம் நடத்த வேண்டு மென்றும் அவர் குறிப்பிட்டார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply