அமெரிக்காவில் துரித உணவக ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ், பெர்க்லி, நியுயார்க், கான்சாஸ், ராலெய்க் மற்றும் பர்மிங்காம் ஆகிய நகரங்களில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி துரித உணவக ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.  வருமானவரி உச்சவரம்பில் மாற்றம் கொண்டு வர வேண்டும், சம்பளத்தை உயர்த்தி தர வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் நடைபெற்றது. அமெரிக்காவின் பல்வேறு இடங்களில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் துரித உணவக ஊழியர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

அப்போது அவர்கள், மணிக்கு 15 டாலர் என்ற அளவிற்கு தங்கள் ஊதியத்தை உயர்த்தி தர வேண்டும் என்று வலியுறுத்தினர்.  அமெரிக்காவின், பல்வேறு இடங்களில் துரித உணவகங்கள் மற்றும் சில்லறை உணவு விற்பனை கடைகள் துவங்கப்படுவதாகவும், ஆனால் ஊழியர்களின் சம்பளத்தில் உயர்வு எதுவும் அளிக்கப்படவில்லை என்றும் ஆர்ப்பாட்டக்காரர்கள் குற்றஞ்சாட்டினர். அமெரிக்க அதிபர் பதவிக்கான தேர்தல் பிரச்சாரத்தின்போது, ஊழியர்களின் ஊதிய பிரச்சனை விஸ்வரூபம் எடுக்கும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply