ஐரோப்பா வந்த அகதிகள் படகில் மத மோதல்: 12 பேர் கடலில் வீசி கொலை
லிபியாவில் இருந்து ஐரோப்பிய நாடுகளுக்கு அகதிகளை ஏற்றி வந்த படகு இத்தாலி அருகே மத்திய தரை கடலில் மூழ்கியதில் 400 பேர் பலியாகினர். 41 பேர் மாயமாகினர் அல்லவா? அதைத் தொடர்ந்து படகு மூழ்கிய இடத்தை விமானம் கண்டு பிடித்தது. அங்கு கடற்படை கப்பல் அனுப்பப்பட்டது. அதையடுத்து அங்கு கடலில் தத்தளித்து கொண்டிருந்த 4 பேரை போலீசார் உயிருடன் மீட்டனர்.
அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்திய போது அவர்கள் நைஜீரியா, கானா மற்றும் நைஜர் நாட்டை சேர்ந்தவர்கள். மேலும் கப்பல் மூழ்கியது குறித்து அவர்களிடம் இத்தாலி போலீசார் விசாரித்தனர்.
விசாரணையில், படகில் வந்த முஸ்லிம் மற்றும் கிறிஸ்தவ அகதிகளிடையே மோதல் ஏற்பட்டது என தெரிவித்தனர். ஒரு கட்டத்தில் மோதல் உச்ச கட்டத்தை அடைந்ததும் கை கலப்பு ஏற்பட்டது.
அப்போது, 12 கிறிஸ்தவர்கள் கடலில் வீசி கொல்லப்பட்டனர். அதனால் கப்பல் நிலை தடுமாறி கடலில் மூழ்கியது என தெரிவித்தனர்.
அதை தொடர்ந்து 15 முஸ்லிம் அகதிகள் இத்தாலி போலீசார் கைது செய்தனர். கடலில் வீசி கொல்லப்பட்டவர்கள் நைஜீரியா மற்றும் கானா நாடுகளை சேர்ந்தவர்கள் ஆவர்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply