என்னால் மக்களை புறக்கணிக்க முடியாது : மஹிந்த ராஜ பக்ஷ
தேர்தலில் போட்டியிடுமாறு மக்கள் வேண்டுகோள் விடுத் தால் என்னால் அதனை புறக் கணிக்க முடியாது என முன் னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜ பக்ஷ கார்டியனிற்கு அளித்துள்ள பேட்டியில் குறிப்பிட்டுள்ளார். தேர்தலில் போட்டியிடுவது குறித்து இன்னமும் நான் தீர்மானிக்கவில்லை, ஆனால் மக்கள் வேண்டுகோள் விடுத்தால் என்னால் புறக்கணிக்க முடியாது.எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் எனக்கு போட்டியிடுவதற்கு சந்தர்ப்பம் வழங்கப்படும் என நம்பிக்கை கொண்டுள்ளேன். நான் சுதந்திரக்கட்சியை சேர்ந்தவன். எனது வாழ்நாள் முழுவதும் அவ்வாறே இருந்துள்ளேன்.
இவ்வாறான சூழ்நிலையில் கட்சி எனக்கு ஏன் போட்டியிட அனுமதி மறுக்க வேண்டும். நான் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி சார்பிலேயே போட்டியிட விரும்புகிறேன் நான் ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சியை சேர்ந்தவன் என்பதை புறக்கணிக்க முடியாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply