நாட்டின் உயரமான பனி மலையின் மீது ஏறி ராணுவ வீரர்களுக்கு வாழ்த்து கூறிய பிரதமர்

கொரிய தீபகற்பத்தின் வட பகுதியில் அமைந்துள்ள வட கொரியாவிற்கும் சீனாவுக்கு இடையேயான எல்லைப்பகுதியில் 9003 அடி உயரத்தில், வட கொரியாவில் மிக உயரமான மலைச்சிகரம் என்ற பெருமையுடன் பிரம்மாண்டமாக வீற்றிருக்கிறது பக்து மலைச்சிகரம். அனுபவமிக்க ஒரு மலையேற்ற வீரரைப் போல் அந்நாட்டு பிரதமர் கிம் அந்த சிகரத்தின் மீது ஏறியிருப்பது, நாட்டு மக்களையும் ஊடகங்களையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. பனி படர்ந்த மலை சிகரத்தின் மீது ஏறிய கிம், மலையின் மீதுள்ள ராணுவ படைக்குழுக்களுக்கு தனது வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளது வீரர்களை நெகிழ்ச்சியடையச் செய்துள்ளது.

இந்த திடீர் மலையேற்றம் குறித்து 32 வயதான வட கொரிய பிரதமர் கிம் ஜாங், “எந்த அணு ஆயுதமும் கொடுக்க முடியாத மனோ வலிமையை பக்து மலையேற்றம் எனக்கு தந்தது” என்கிறார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply