19 ஆவது திருத்தத்தை நிறைவேற்றியே தீருவோம்
அரசியலமைப்பின் பத்தொன்பதாவது அரசியலமைப்பு திருத்தம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்படும் என்ற நம்பிக்கை எமக்கு உள்ளது. இத்திருத்தத்தை விவாதத்திற்கு எடுத்துக்கொள்வதற்கு சபாநாயகர் தீர்மானம் எடுத்து விட்டார் என்று சபை முதல்வரும் அமைச்சருமான லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்தார்.
இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,
19 ஆவது திருத்தம் பாராளுமன்றத்தில் விவாதம் நடத்தப்பட்டு அது நிச்சயம் நிறைவேற்றப்படும். இவ் விடயத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோர் இணக்கப்பாட்டை ஏற்படுத்திக் கொண்டுள்ளனர்.
அத்தோடு சபாநாயகர் சமல் ராஜபக்ஷ கட்சித் தலைவர்களுடன் பல சுற்றுப்பேச்சுவார்த்தைகளை நடத்தினார். அப் பேச்சுவார்த்தைகளின் போது 19 ஆவது திருத்தம் தொடர்பான விவாதத்தை நடத்துவதற்கு இணக்கப்பாடு காணப்பட்டது.
அத்தோடு 19 ஆவது திருத்தம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்படும். நிறைவேற்று அதிகாரமுடைய ஜனாதிபதிக்கு உள்ள சர்வாதிகார அதிகாரங்களை குறைப்பதற்காகவே இந்த திருத்தம் கொண்டு வரப்படுகிறது.கடந்த காலத்தில் ஆட்சியாளர்கள் தமது அதிகாரங்களை அதிகரித்துக் கொள்வதற்கும் தக்கவைத்துக் கொள்வதற்குமே திருத்தங்களை நிறைவேற்றினார்கள்.
ஆனால் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அதிகாரங்களை குறைப்பதற்கு திருத்தங்களை கொண்டு வருகிறார்.ஜனாதிபதித் தேர்தலின் போது நிறைவேற்று அதிகாரத்தை ஒழிப்பதாக மக்களுக்கு வாக்குறுதி வழங்கினோம்.
அதற்கமைய 19 ஆவது கொண்டு வந்து நிறைவேற்றவுள்ளோம்.நாட்டில் ஜனநாயகத்தை நிலை நிறுத்தும் 19க்கு அனைத்து கட்சிகளும் ஆதரவு வழங்க வேண்டுமென்றும் அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்தார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply