அமெரிக்காவில் மேலும் ஒரு இந்து கோவில் மீது தாக்குதல்: கதவின் மீது சாத்தான் குறியீடு வரைந்ததால் பரபரப்பு
அமெரிக்காவில் உள்ள ஒரு கோவில் மீது அடையாளம் தெரியாத நபர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர். மேலும் கோவில் கதவில் சாத்தானின் குறீயிட்டை வரைந்துள்ளனர். டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள ஓல்ட் லேக் ஹைலாண்ட் என்ற பகுதியில் உள்ள இந்து மத கோவில் மீது தாக்குதல் நடத்திய மர்ம நபர்கள், ஸ்பிரே பெயிண்டால் கோவில் கதவின் மீது 666 என்று எழுதியுள்ளனர். 666 என்பது பைபிளில் சாத்தானை குறிக்கும் வகையில் பயன்படுத்தப்படும் குறியீடாகும். மேலும் சிலுவையை தலை கீழாகவும் வரைந்துள்ளனர். இச்சம்பவம் காரணமாக அப்பகுதியில் திடீர் பரபரப்பு ஏற்பட்டது.இது பற்றி அந்த கோவிலின் நிர்வாக குழு உறுப்பினர் கிர்ஷ்ணா சிங் கூறுகையில், ‘‘இந்த சம்பவத்தால் நானும், எங்கள் சமூக மக்களும் மிகவும் அதிர்ச்சி அடைந்துள்ளோம். இதுபோன்ற ஒரு செயலை ஒரு தேவாலயத்திற்கு எதிராக யாரேனும் செய்வார்களா?” என கேள்வி எழுப்பினார்.
தற்போது கோவிலைச் சுற்றி வேலி அமைக்கும் பணி நடந்து வருகிறது. இந்துக்கள் மற்றும் பிற மதத்தினரும் கோவிலை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.
அமெரிக்காவில் இந்து கோவில்கள் மீது தாக்குதல் நடப்பது இது முதல் முறை அல்ல. கடந்த மூன்று மாதத்தில் நடைபெறும் மூன்றாவது சம்பவம் இதுவாகும்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply