13,000 விடுதலைப் புலிகள் கொல்லப்பட்டுவிட்டனர்: இராணுவத் தளபதி
இராணுவத்தினரின் தரைவழித் தாக்குதல்களில் 12,000 விடுதலைப் புலிகள் கொல்லப்பட்டிருப்பதுடன், வான்வழித் தாக்குதல்களில் 1,000 பேர் கொல்லப்பட்டிருப்பதாக இராணுவத் தளபதி லெப்டினட் ஜென்ரல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
“மோதல்கள் ஆரம்பித்த நாளிலிருந்து இதுவரை 7000௮000 விடுதலைப் புலிகள் காயமடைந்துள்ளனர்” என கஜபா இராணுவப் படைப்பிரிவில் நேற்று திங்கட்கிழமை உரையாற்றும் போது அவர் கூறியிருந்தார்.
எனினும், விடுதலைப் புலிகள் அமைப்பில் 3000 பேரே எஞ்சியிருப்பதாக டிசம்பர் மாதம் 2007ஆம் ஆண்டு சண்டே டைம்ஸ் பத்திரிகைக்கு வழங்கியிருந்த செவ்வியில் இராணுவத் தளபதி கூறியிருந்தார்.
80 வீதமான மோதல்கள் முடிவடைந்திருப்பதாகக் குறிப்பிட்ட இராணுவத் தளபதி, யாழ்ப்பாணத்தையும் வன்னி பெரும்நிலப்பரப்பையும் இணைக்கும் பூநகரி பகுதியிலிருந்து ஏழு கிலோ மீற்றர் தூரத்திலேயே அரசாங்கப் படைகள் நிலைகொண்டிருப்பதாகத் தெரிவித்தார்.
வடபகுதியிலிருந்து விடுதலைப் புலிகள் முற்றாக நீக்கப்பட்டு யாழ் குடாநாட்டையும், கொழும்பையும் இணைக்கும் தரைவழிப் பாதை விரைவில் திறக்கப்படும் என இராணுவத் தளபதி நம்பிக்கை வெளியிட்டார்.
விடுதலைப் புலிகளின் முக்கிய பகுதியான கிளிநொச்சியைக் கைப்பற்றும் இலக்கை நோக்கி அரசாங்கப் படைகள் செயற்பட்டு வருவதாகக் குறிப்பிட்ட சரத் பொன்சேகா, மணலாறு பகுதியில் மோதலில் ஈடுபட்டிருக்கும் விசேட கொமாண்டோ படையினர் மாங்குளம் தெற்கிலிருந்து ஓமந்தை வரையிலான பகுதியைத் தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவார்கள் எனக் கூறினார்.
இலங்கை இராணுவத்தின் தளபதியாக இருக்கும் காலப் பகுதிக்குள்ளேயே மோதலை முடிவுக்குக் கொண்டுவரவேண்டுமென்ற குறிக்கோளுடன் தான் செயற்பட்டு வருவதாக இராணுவத் தளபதி சரத் பொன்சேகா தெரிவித்தார்.
இராணுவத்திலிருந்து தப்பியோடியவர்களைக் கைதுசெய்ய உத்தரவு
இதேவேளை, இராணுவத்திலிருந்து தப்பியோடியவர்களை மீண்டும் படையில் இணைத்துக்கொள்வதற்கு பொதுமன்னிப்புக் காலத்தை வழங்கயிருக்கும் இராணுவத் தலைமையகம், பொதுமன்னிப்புக் காலத்தில் சரணடையாதவர்களை கைதுசெய்யுமாறும் உத்தரவிட்டுள்ளது.
இராணுவத்திலிருந்து தப்பியோடிய 15,000 பேரையும் மீண்டும் இணைத்துக்கொள்ளும் முயற்சியில் இராணுவத் தலைமையகம் ஈடுபட்டுள்ளது. இதற்குப் போதியளவு பலன் கிடைக்காததால் தப்பியோடியவர்களில் 3000ற்கும் அதிகமானவர்களைக் கைதுசெய்து சிறையில் அடைத்தது.
இந்த நிலையில் கடந்த சனிக்கிழமை முதல் எதிர்வரும் 15ஆம் திகதி வரை தப்பியோடிய இராணுவத்தினர் மீண்டும் இணைந்து கொள்வதற்கு பொதுமன்னிப்பு வழங்கப்பட்டுள்ளது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply