பொலிஸ் நிதிமோசடிப் பிரிவு விசாரணைகள் சுயாதீனமானது அரசியல் தலையீடு கிடையாது
பொலிஸ் நிதி மோசடி விசாரணைப்பிரிவு மற்றும் சட்டத்தை நடைமுறைப்படுத்தும் ஏனைய சிறிய பிரிவுகளினால் முன்னெடு க்கப்படும் விசாரணைகள் சுயாதீனமானது எனவும் இவற்றில் எந்தவொரு அரசியல் தலையீடும் இல்லையென்றும் அரசாங்கம் அறிவித்துள்ளது. அமைச்சரவையின் அங்கீகாரத்துடனேயே பொலிஸ் நிதி மோசடி விசாரணைப்பிரிவில் அமைச்சரவை உபகுழு நியமிக்கப்பட்டதென்றும் எதிர்காலத்தில் இடம்பெறக்கூடிய பாரிய நிதி மோசடிகள், குற்றச்செயல்களை அடையாளம் கண்டு அவற்றை கட்டுப்படுத்தவே அமைச்சரவை உபகுழு ஆரம்பிக்கப்பட்டுள்ளது என்றும் அரசாங்கம் அறிவித்துள்ளது.
நாட்டில் தொடர்ச்சியாக பாரியளவில் நிதி மோசடிகள் அதிகரித்து வருகின்ற காரணத்தினால் தான் பொலிஸ் நிதி மோசடி விசாரணைப்பிரிவு தற்போது ஆரம்பிக்கப் பட்டுள்ளது. இந்த மோசடிகளை கட்டுப் படுத்தவே இவை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.
பொலிஸ் கட்டளைச் சட்டத்தின் 55ஆவது திருத்தத்தின்படி அமைச்சரவை அனுமதியுடன் பொலிஸ்மா அதிபரின் முழுமையான மேற்பார்வை மற்றும் ஆலோசனைக்கு அமைய பொலிஸ் நிதி மோசடி விசாரணைப்பிரிவு ஆரம் பிக்கப்பட்டது.
பொலிஸ் திணைக்களத்தில் இவ்வாறான 64 பிரிவுகள் செயற்பட்டு வருகின்றன. அவற்றில் பயங்கரவாத தடுப்பு பிரிவு, குற்றத் தகவல் பிரிவு, குற்றப்புலனாய்வு பிரிவு, கொழும்பு குற்றத்தடுப்பு நிலையம், போதைப்பொருள் காரியாலயம், பொலிஸ் சிறுவர் மற்றும் பெண்கள் பிரிவு, ஊழல் விசாரணைப்பிரிவு மற்றும் சூழல் பாதுகாப்பு பிரிவுகளும் அடங்கும். இவை பொலிஸ் திணைக்களம் ஆரம் பிக்கப்பட்ட போது ஆரம்பிக்கப்பட வில்லை. மாற்றமாக அந்தக் காலப்பகுதியில் இடம்பெற்ற சம்பவங்களை அடிப்படை யாகக் கொண்டு ஆரம்பிக்கப்பட்டது.
பொலிஸ் நிதி மோசடி விசாரணைப் பிரிவும் அவ்வாறுதான் ஆரம்பிக்கப்பட்டது. பொலிஸ் திணைக்களத்திற்கு காணப்படும் அதிகாரங்களைத் தவிர சட்டரீதியான ஏனைய விசேட அதிகாரங்கள் இந்தப் பிரிவுக்கு வழங்கப்படவில்லை. இவ்வாறான பொலிஸ் நிதி மோசடி விசாரணைப்பிரிவு ஆரம்பிக்கப்பட்டதன் பிரதான நோக்கம், அனுபவம் வாய்ந்த உத்தியோகத்தர்களின் சேவையை பெற்றுக் கொண்டு விசேட பொறிமுறையொன்றின் ஊடாக உடனடியாக நடைமுறைப்படுத்துவதாகும்.
இவ்வருடம் ஜனவரி 21ம் திகதி நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தின் போது எடுக்கப்பட்ட தீர்மானத்தின்படியே ஊழல் ஒழிப்பு குழுவில் அமைச்சரவை உப குழு இணைத்துக் கொள்ளப்பட்டது. எதிர்காலத்தில் இடம்பெறக்கூடிய பாரிய நிதி மோசடிகள் மற்றும் மோசடிகளை தவிர்ப்பதற்கான படிமுறைகளை பரிந்துரை செய்யும் நோக்கத்துடன் இக்குழு ஸ்தாபிக்கப்பட்டது.
இக்குழுவின் பரிந்துரையுடனும் அமைச்சரவை அனுமதியுடன் தனியான செயலகம் ஒன்றும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அவ்வாறே, செயலாளர் காரியாலத்தினூடாக பாரிய நிதி குற்றம் மற்றும் மோசடி தொடர்பில் மேற்கொள்ளக்கூடிய விசாரணைகளை தொடர்புபடுத்துவதாகும்.
அவ்வாறே, பொலிஸ் நிதி மோசடி விசாரணைப்பிரிவு அல்லது அதன் செயலாளர் காரியாலயம் அமைச்சரவை உபகுழுவின் நிர்வாகத்திற்கு உட்பட் டதல்ல. எனினும், சட்டத்தை உரிய முறையில் நடைமுறைப்படுத்துவதற்காக பொலிஸ் நிதி மோசடி விசாரணைப் பிரிவினாலும் மாத்திரமின்றி சட்டத்தை நடைமுறைப்படுத்தும் சிறிய பிரிவுகளி னாலும் மேற்கொள்ளப்பட்ட முன்னேற்ற அறிக்கை வாராந்தம் மீளாய்வு செய் யப்படும்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply