ரூ.150 கோடி பரிசுக்காக பின்லேடன் பற்றி தகவல் தெரிவித்த அதிகாரி
அல்கொய்தா தீவிரவாத இயக்க தலைவரான பின்லேடன், கடந்த 2011-ம் ஆண்டு மே 2-ந்தேதி பாகிஸ்தானின் அப்போதாபாத் நகரில் அமெரிக்க அதிரடிப்படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டார். அவரது மறைவிடம் குறித்து அமெரிக்காவுக்கு தகவல் தெரிவித்ததாக பலரது பெயர்கள் அடிபட்டன. பின்லேடன் பற்றிய தகவலை பாகிஸ்தானின் முன்னாள் உளவுத்துறை அதிகாரி ஒருவர்தான் அமெரிக்காவுக்கு தெரிவித்ததாக அமெரிக்க பத்திரிகையாளர் செய்மர் எம்.ஹெர்ஷ் கூறியதாக பாகிஸ்தான் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. கடந்த 2010-ம் ஆண்டு ஆகஸ்டு மாதத்தில் அந்த அதிகாரி அமெரிக்க உளவுத்துறை (சி.ஐ.ஏ.) தலைவரை இஸ்லாமாபாத்தில் உள்ள அமெரிக்க தூதரகத்தில் சந்தித்துள்ளார். அப்போது அவரிடம் பின்லேடனின் தலைக்கு அமெரிக்க அறிவித்திருந்த 25 மில்லியன் டாலர் (சுமார் ரூ.150 கோடி) தந்தால், பின்லேடனின் மறைவிடம் பற்றிய தகவலை தெரிவிக்கலாம் என்று கூறியுள்ளார்.
பின்னர் அந்த பணத்தை பெற்றுக்கொண்டு, பின்லேடனின் மறைவிடத்தை பற்றிய தகவல்களை கூறியுள்ளார். அவர் ஒரு ராணுவ வீரர் என்றும், தற்போது வாஷிங்டனில் வசித்து வரும் அவர் சி.ஐ.ஏ.யில் ஆலோசகராக பணியாற்றி வருவதாகவும் கூறிய ஹெர்ஷ், இதற்கு மேல் அவரைப்பற்றி எதுவும் கூற முடியாது என்றும் கூறியதாக பாகிஸ்தான் பத்திரிகை செய்தி வெளியிட்டு உள்ளது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply