நேபாளத்தில் மீண்டும் ஒரு பெரிய பூகம்பம்
நேபாளத்தை மீண்டும் ஒரு பெரிய பூகம்பம் தாக்கியுள்ளது. இந்தியாவிலும் அதன் அதிர்வுகள் உணரப்பட்டுள்ளன. இந்த புதிய பூகம்பத்தின் அளவு 7.4 புள்ளிகள் என்று அமெரிக்க நிலவியல் ஆய்வு நிறுவனம் மதிப்பிட்டுள்ளது. 30 செக்கன்களுக்கு இது நீடித்துள்ளது. பூகம்பத்தின் பின்னரான அதிர்வுகள் 5 தடவைகள் உணரப்பட்டுள்ளன.
இதுவரை காத்மண்டுவில் 2 பேரும் சவுத்ராவில் 4 பேரும் கொல்லப்பட்டதாக வந்திருக்கும் தகவல்கள் கூறுகின்றன.நேபாள தலைநகர் காத்மண்டுவிலும், இந்திய தலைநகர் டில்லியிலும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கட்டிடங்களை விட்டு வெளியே ஓடியுள்ளனர்.கடந்த மாதம் தாக்கிய பூகம்பம் 7.8 புள்ளிகள் என்று மதிப்பிடப்பட்டிருந்தது. அதில் 7000க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டனர்.
தற்போதைய பூகம்பம் காத்மாண்டுவுக்கும், எவரெஸ்ட் சிகரத்துக்கும் இடையில் மையம் கொண்டிருந்தது. இலகுவில் செல்ல முடியா இடங்களில் நிலச்சரிவு ஏற்படலாம் என்ற அச்சமும் காணப்படுகின்றது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply