சொத்துக்குவிப்பு வழக்கு: மேல்முறையீடு குறித்து கர்நாடக சட்ட அமைச்சர் ஜெயச்சந்திரன்
சொத்துக்குவிப்பு வழக்கின் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்வது குறித்து சட்ட வல்லுநர்களுடன் கலந்து ஆலோசித்து முடிவு செய்யப்படும் என கர்நாடக சட்ட அமைச்சர் ஜெயச்சந்திரன் தெரிவித்துள்ளார். சொத்துக் குவிப்பு வழக்கில் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா, சசிகலா உள்ளிட்ட 4 பேரையும் விடுதலை செய்து நீதிபதி குமாரசாமி உத்தரவிட்டார். சிறப்பு நீதிமன்றம் அளித்த 4 ஆண்டு தண்டனையை ரத்து செய்ததுடன், 100 கோடி ரூபாய் அபராதத்தையும் நீதிபதி ரத்து செய்தார். மேலும், சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோரின் தண்டனையை ரத்து செய்த நீதிபதி, முடக்கப்பட்ட ஜெயலலிதாவின் சொத்துக்களை திருப்பி ஒப்படைக்கவும் உத்தரவிட்டார். இது தொடர்பான 919 பக்கங்கள் அடங்கிய தீர்ப்பின் நகல், கர்நாடக உயர்நீதிமன்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டது.
இந்நிலையில், சொத்துக்குவிப்பு மேல்முறையிட்டு வழக்கில் தீர்ப்பின் முழுநகலையும் படிக்குமாறு சட்டத்துறை செயலாளருக்கு கர்நாடக சட்ட அமைச்சர் ஜெயச்சந்திரா உத்தரவிட்டுள்ளார். இது குறித்து பெங்களூருவில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், சொத்துக்குவிப்பு வழக்கின் தீர்ப்பு குறித்து அரசு வழக்கறிஞர் ஆச்சார்யா, அரசின் தலைமை வழக்கறிஞர் உள்ளிட்டோருடன் கலந்து ஆலோசித்து முடிவு எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply