நைஜீரியா, கேமரூன் நாடுகள் புனரமைப்பு பணிகளில் தீவிரம்

தீவிரவாத தாக்குதல்களால் நிலைகுலைந்துள்ள நைஜீரியா, கேமரூன் போன்ற நாடுகள் புனரமைப்பு பணிகளில் தீவிரம் காட்டி வருகின்றன. கடும் பொருளாதார நெருக்கடி உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் இப்பணிகள் தொய்வு அடைந்துள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. நைஜீரியா, கேமரூன், கென்யா போன்ற ஆப்பிரிக்க நாடுகள் கடந்த 6 ஆண்டுகளாக கடும் தீவிரவாத தாக்குதல்களுக்கு உள்ளாகி வருகின்றன. போக்கோஹராம், மற்றும் அல் சபாப் இயக்கங்கள் இத்தாக்குதல்களில் ஈடுபட்டு வருகின்றன.

இதனால் பொதுமக்களின் வாழ்விடங்கள் பலத்த சேதங்களைச் சந்தித்தன என்பது மட்டுமல்லாமல், குழந்தைகள், பெண்கள் உள்பட சுமார் 15 லட்சம் பேர் பாதுகாப்பு காரணங்களுக்காக இடம் பெயர்ந்துள்ளனர். பல கிராமங்கள் தீவிரவாதிகளால் தீ வைத்துக் கொளுத்தப்பட்டதையடுத்து, பெண்கள் மற்றும் குழந்தைகள் தீக்காயங்களுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

சாத், நைஜர் போன்ற நாடுகளும் தாக்குதல்களால் நிலைகுலைந்துள்ள நிலையில், நைஜீரியா மற்றும் கேமரூன் நாடுகள் தீவிரவாதிகளின் பிடியில் இருந்த பகுதிகளை மீட்டு வருகின்றன. தீவிரவாத தாக்குதல்கள் குறைந்துள்ளதையடுத்து, தங்கள் வாழ்விடங்களைச் சீரமைக்கும் பணிகளை பலர் மேற்கொண்டு வருகின்றனர். கடும் பொருளாதார நெருக்கடி உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் இப்பணிகள் தொய்வு அடைந்துள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply