அரசுமுறைப் பயணம் சீனாவில் மோடிக்கு சிவப்பு கம்பள வரவேற்பு
சீனாவில் 3 நாள் அரசுமுறைப் பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் மோடி, சீன அதிபர் ஜிங்பிங்கை இன்று சந்தித்து பேசுகிறார். டெல்லி சர்வதேச விமான நிலையத்திலிருந்து நேற்றிரவு சீனாவின் ஷியான் நகருக்கு பிரதமர் மோடி புறப்பட்டுச் சென்றார். இன்று காலை ஷியான் விமான நிலையத்தில் இறங்கிய பிரதமருக்கு, சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. சீனப் பிரதிநிதிகளுடன் கைகுலுக்கிக்கொண்ட் பிரதமர் மோடி, சீனச் சிறுமிகள் அளித்த பூங்கொத்துக்களை இன்முகத்தோடு பெற்றுக்கொண்டார். இதனைத்தொடர்ந்து ஷியான் விமான நிலையத்தில் சீனக் நடனக் கலைஞர்கள் நிகழ்த்திய கலை நிகழ்ச்சிகளையும் பிரதமர் மோடி கண்டு மகிழ்ந்தார்.
இதனைத்தொடர்ந்து சீன அதிபர் ஜிங்பிங்கை சந்தித்து பேசும் மோடி, பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் வழியாக சீனா மேற்கொள்ளவுள்ள சிறப்பு பொருளாதாரப் பாதை திட்டத்தை கைவிடுமாறு இந்தியா தரப்பில் கோரிக்கை வைக்கப்படும் என கூறப்படுகிறது. முன்னதாக சீன தொலைகாட்சிக்கு பேட்டியளித்த அவர், சீனப்பயணத்தின் மூலம் இருநாடுகளுக்கு இடையேயான உறவுகள் மேலும் பலப்படும் என்றும் தெரிவித்தார். சீனப் பயணத்தைத் தொடர்ந்து மங்கோலியா செல்லும் பிரதமர், தென்கொரியாவிலும் அரசுமுறைப் பயணத்தை மேற்கொள்கிறார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply