புலிகளின் பிடியிலிருந்து தப்பி வரும்போது சிவிலியன்கள் மீது புலிகள் துப்பாக்கிப் பிரயோகம்

புலிகளின் பிடியிலிருந்து தப்பி  புதுக்குடியிருப்பு பிரதேசங்களை நோக்கி வருகை தந்த பொது மக்களை இலக்கு வைத்து புலிகள் சரமாரியாக நடத்திய துப்பாக்கிப் பிரயோகத்தில் 9 வயது சிறுவன் கொல்லப்பட்டு ள்ளதுடன், 14 பொது மக்கள் காயமடைந்துள்ளனர். புலிகளின் துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த 14 பொது மக்களில் ஐ. நா.வின் பெண் பணியாளரான சுதர்ஷினி தர்மிலாவும் அடங்குவதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார நேற்றுத் தெரிவித்தார்.

நேற்று முன்தினம் 1015 பொது மக்களும், நேற்றைய தினம் 858 பொது மக்களும் அரச கட்டுப்பாட்டுப் பிரதேசங்களுக்கு வருகை தந்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார். புதுமாத்தளன் பிரதேசத்திலிருந்து ஐந்து படகுகள் மூலம் 67 பொதுமக்கள் தங்களது குழந்தைகளுடன் தப்பி வந்துள்ளனர். யாழ் ப்பாணத்தின் முனைப் பிர தேசத்தை நோக்கி வருகை தந்த இந்த பொது மக்களை இலக்கு வைத்து

புலிகள் சரமாரியாக துப்பாக்கிப் பிரயோகம் செய்துள்ளனர்.

இவற்றில் ஒரு படகில் வந்த தவநாயகம் தனூஷன் என்ற ஒன்பது வயது சிறுவன் படுகாயமடைந்து பின்னர் உயிரிழந்துள்ளார்.

இதேவேளை, புதுக்குடியிருப்பு பிரதேசத்தை நோக்கி, 791 பொது மக்கள் வருகை தந்து பாதுகாப்புப் படையினரிடம் தஞ்சமடைந்துள்ளனர். இவர்களுக்குத் தேவையான ஏற்பாடுகளை பாதுகாப்புப் படையினர் செய்து கொடுத்துள்ளனர்.

இதேவேளை, புதுக்குடியிருப்பு மற்றும் புதுமாத்தளன் பிரதேசங்களிலிருந்து அரச கட்டுப்பாட்டுப் பிரதேசத்தை நோக்கி நேற்று முன்தினம் பல குழுக்களாக 1015 பொதுமக்கள் வருகை தந்துள்ளனர்.

புதுக்குடியிருப்பிலிருந்து நேற்று முன்தினம் காட்டு வழியாக தப்பி வந்த பொது மக்களை இலக்கு வைத்து புலிகள் சரமாரியாக துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டுள்ளனர். இந்தச் சம்பவத்தில் 14 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

காயமடைந்த 14 பேரில் ஐ. நா. பெண் பணியாளர் ஒருவரும் அடங்குவதாக பிரிகேடியர் சுட்டிக்காட்டினார்.

இதேவேளை புதுமாத்தளன் பிரதேசத்திலிருந்து நோய்வாய்ப்பட்ட மேலும் 423 பொதுமக்கள் கப்பல் மூலம் திருகோணமலைக்கு பாதுகாப்பாக அழைத்து வரப்பட்டுள்ளனர். சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் கிரீன் ஓஷன் கப்பல் மூலம் கடற்படையினரின் உதவியுடன் இந்த 423 பொது மக்களும் பாதுகாப்பாக அழைத்து வரப்பட்டதாக கடற்படைப் பேச்சாளர் கப்டன் டி. ஜே. பி. தஸநாயக்க தெரிவித்தார்.

ஐ. சி. ஆர். சியின் உதவியுடன் இதுவரை பத்துத் தடவைகள் கப்பல் மூலம் பொதுமக்கள் திருகோணமலைக்கு அழைத்து வரப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply