போரில் உயிர் நீத்தோரை அஞ்சலி செலுத்தத் தடையில்லை பொலிஸ் பேச்சாளர் உறுதி

தமிழர்கள், போரில் கொல்லப்பட்ட தமது உறவுகளை நினைவு கூரலாம். அதற்கு எந்தத் தடையும் இல்லை. அது அவர்களின் உரிமை. அதனைப் பொலிஸாரும் தடுக்க மாட்டார்கள் என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், இறந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்துவது மனிதாபிமானச் செயல். அத்துடன் அது உறவுகளின் உரிமையாகும். வடக்கில் தமிழர்கள் தமது உறவுகளை நினைவு கூரும்போது அதற்கு யாரும் தடை விதிக்க முடியாது. நாமும் தடை விதிக்கவில்லை. வடக்கு மட்டுமன்றி நாட்டில் எந்த பிரதேசத்திலும் இறந்த ஒருவருக்காக உறவினர்கள் அஞ்சலி செலுத்தலாம்.

அதேவேளை, தடை செய்யப்பட்ட அமைப்பு என்ற ரீதியில் விடுதலைப் புலிகளை நினைவு கூருவது சட்டவிரோதமானது. தமிழீழ விடுதலைப் புலிகளை நினைவு கூருவதை நாம் தடை செய்துள்ளோம்.

புலிகள் அமைப்பை நினைவு கூரும் விதமாகப் பொது இடங்களில் கூட்டங்களை நடத்துவது, சுடர் ஏற்றுவது உள்ளிட்ட நிகழ்வுகளை நாம் தடை செய்கிறோம்.அத்தகைய நடவடிக்கைகளில் ஈடுபடுவோரை நாம் கைது செய்வோம் என்றார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply