முன்னணி சட்டவாதிகளுடன் பிரதமர் இன்று சந்திப்பு கோத்தா தடையுத்தரவு தொடர்பில் ஆராய்வு
முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவை கைது செய்வதற்கு உச்சநீதிமன்றம் வழங்கியிருக்கும் இடைக்காலத் தடையுத்தரவு தொடர்பில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க இன்றையதினம் முன்னணி சட்டத்தரணிகள் குழு வொன்றை சந்திக்கவுள்ளார். உச்சநீதிமன்றத்தின் தடையுத்தரவு தொடர்பில் எழுந்திருக்கும் வாதங்கள் குறித்தும் இது விடயத்தில் அரசாங்கம் மற்றும் பொலிஸ் தினைக்களத்தால் எடுக்கக் கூடிய சாத்தியமான நடவடிக்கைகள் குறித்தும் இச்சந்திப்பில் விரிவாக ஆராயப்படவுள்ளது.
இன்று இரவு நடைபெறவிருக்கும் இந்த முக்கியமான கூட்டத்தில் உச்சநீதிமன்றத்தால் வழங்கப்பட்ட இடைக்காலத்தடையுத்தரவை ஐந்து நீதிபதிகள் அடங்கிய குழு விசாரிக்க வேண்டும் என்ற இடையீட்டு மனுவைத் தாக்கல் செய்வதா இல்லையா என்ற இறுதித் தீர்மானம் எடுக்கப்படும் என அரசாங்கத்துக்கு நெருக்கமான வட் டாரங்கள் தெரிவித்தன.
“இந்த நிலையில், இரண்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட வேண்டும். ஒன்று பிரதமர் மற்றும் அமைச்சரவைக்கு எதிராகத் தாக்கல் செய்யப்படட்டுள்ள அடிப்படை மீறல் மனுவுக்கு எதி ரானது. மற்றையது பொலிஸ் திணைக்களத்தின் கீழ் உள்ள நிதி மோசடி விசாரணைப் பிரிவின் செயற்பாடுகளுக்கு எதிரானது. பிரதமர் மற்றும் அமைச்சரவைக்கு எதிராக தனிப்பட்ட சட்டத்தரணிகளும், பொலிஸ் திணைக்களம் சார்பில் சட்டமா அதிபர் திணைக்களமும் வாதாட முடியும். இது தொடர்பில் இன்னமும் இறுதி முடிவு எட்டப்படவில்லை.
இன்று நடைபெறும் கூட்டத்தில் இறுதித் தீர்மானம் எடுக்கப்படும்” என உயர்மட்ட சட்ட வல்லுனர் ஒருவர் குறிப்பிட்டார்.
அரசியலமைப்புக்கு அமைய இரண்டு நீதியரசர்களால் இடைக்காலத் தடை யுத்தரவு வழங்கமுடியாது என்ற அடிப்படையில் இதனை கேள்விக்கு உட்படுத்த முடியும் என பிரதமரின் சட்டத்தரணிகள் ஆலோசனை வழங்கி யிருப்பதாகத் தெரியவருகிறது.
முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ தாக்கல் செய்திருந்த அடிப்படை உரிமை மீறல் மனுவுக்கு அமைய அவரைக் கைது செய்வதற்கு உச்சநீதிமன்றம் இடைக் காலத் தடையுத்தரவை வழங்கியிருந்தது. இந்த மனுமீதான அடுத்த விசாரணை ஒக்டோபர் 6ஆம் திகதி நடைபெற வுள்ளது.
இந்த விடயம் தொடர்பில் ஜனா திபதி பொதுநலவாய மஜிஸ்திரேட் நீதிபதிகள் சங்கத்திடம் சட்ட ஆலோ சனை பெற விருப்பதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க அண்மையில் நடைபெற்ற கூட்டமொன்றில் கூறி யிருந்தார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply