இரண்டே நாட்களில் ஈராக்கின் ரமாடி நகரில் 500 பேர் பலி
ஈராக்கில் உள்ள அன்பர் மாகாணத்தின் தலைநகரான ரமாடி நகரத்தை ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகள் நேற்று கடும் தாக்குதலுக்கு பிறகு கைப்பற்றிய நிலையில் கடந்த 2 நாட்களாக ரமாடி நகரில் நடந்த தாக்குதலில் பொதுமக்கள், ராணுவ வீரர்கள் என ஒட்டு மொத்தமாக 500 பேர் பலியாகியுள்ளதாக அன்பர் மாகாண கவர்னர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து கவர்னர் முகம்மது ஹைமூர் கூறுகையில் ” இதுவரை, எங்களிடம் இறந்து போனவர்கள் பற்றிய துல்லியமான கணக்கு எதுவும் இல்லை. ஆனால், கடந்த 2 நாட்களில் ராணுவம் பொதுமக்கள் என இதுவரை குறைந்தது 500 பேர் உயிரிழந்துள்ளனர்.” என்றார்.
கடந்த சில தினங்களாக அரசுப் படைகளின் மீது தீவிரவாதிகள் நடத்திய தொடர் குண்டுவீச்சு தாக்குதலுக்கு ஈடுகொடுக்க முடியாமல் திணறிய ராணுவத்தினர் ரமாடி நகரை விட்டு வெளியேறியதையடுத்து, நேற்று அந்நகரம் ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகள் கட்டுப்பாட்டுக்குள் வந்ததாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டன.
மொசூல் நகரையடுத்து, மிகப் பெரிய நகரான ரமாடியும் ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகள் பிடியில் சிக்கிக் கொண்டதால் அங்கு வசித்துவந்த மக்கள் அங்கிருந்து வெளியேறி வருகின்றனர்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply