பிரதமர் மோடி இன்று தென்கொரியா பயணம்
பிரதமர் மோடி மங்கோலியா பயணத்தை முடித்துகொண்டு இன்று தென்கொரியா செல்கிறார். இந்த பயணத்தின் போது மேக் இன் இந்தியா திட்டம் தொடர்பாக பல்வேறு உடன்பாடுகள் மேற்கொள்ளப்பட உள்ளன. தனது 15 வது வெளிநாட்டு சுற்று பயணத்தில் சீனாவிற்கு அடுத்தபடியாக மங்கோலியா சென்ற பிரதமர் மோடி, அந்நாட்டிற்கு சென்ற முதல் இந்திய பிரதமர் என்கிற பெருமையுடன் மங்கோலிய நாடாளுமன்றத்தில் உரையாற்றியானர். பின்னர் இரு நாடுகளுக்கும் இடையே 14 முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. இதனைத்தொடர்ந்து உலன்படோரில் உள்ள சிங்கிஸ்சின் குரி முகாமிற்கு சென்ற பிரதமர் மோடி, அங்கு நடத்தப்பட்ட இசைக் கச்சேரிகளை கண்டுரசித்தார். பின்னர் அம்பு விடும் நிகழ்ச்சியிலும் மோடி கலந்து கொண்டார்.
உலான் படோரில் மங்கோலிய இந்திய மக்கள் அளித்த வரவேற்பில் கலந்துகொண்ட மோடி இசை நிகழ்ச்சிகளையும் யோகா நிகழ்ச்சிகளையும் கண்டுகளித்தார்.
அப்போது மங்கோலிய மக்களிடையே யோகா கலையின் சிறப்புகளை மோடி எடுத்துரைத்தார்.
பிரதமர் மோடி மங்கோலிய பயணத்தை முடித்துகொண்டு இன்று தென் கொரிய தலைநகர் சியோல் சென்றடைகிறார். இன்றும் நாளையும் அந்நாட்டில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளும் அவர், மேக் இன் இந்தியா திட்டம் குறித்து தென் கொரிய அதிபருடன் பேச்சுவார்த்தை நடத்துகிறார். நாளை சியோலில் நடைபெறும் ஆசிய தலைவர்கள் மாநாட்டில் கலந்துகொள்ளும் பிரதமர், தென் கொரிய தொழில் நிறுவனங்களின் தலைவர்களையும் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்துகிறார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply