மே 18 தமிழர்கள் உறவுகளை நினைந்து உணர்வு ரீதியாக நினைவுகூர வேண்டிய நாள் : ப.உதயாராசா
இலங்கை சுதந்திரம் அடைந்த நாள் முதல் எமது தமிழினம் காலத்துக்கு காலம் பல துன்பங்களை சந்தித்து வந்தாலும் தமிழனால் “தமிழன்” என்று ஒரு இனம் இருக்கும் வரையில் மறக்க முடியாத நாட்களாக யூலைக்கலவரமும் முள்ளிவாய்க்கால் படுகொலையையும் அமைந்துள்ளது கருவில்இருந்த குழந்தைமுதல் முதியவர் வரையும் எந்தப்பாகுபாடும் இன்றி கொத்துக்கொத்தாக மண்ணில் மடிந்த அவலத்தினை இன்று நினைத்தாலும் இதயங்கள் கனக்கின்றன.
இந்த அவலம் தந்த வேதனையினை அனுஷ்டிக்க தடைகள் ஏற்படுத்தப்படுவது வெந்த புண்ணில் வேலைப்பாச்சுவதற்கு ஒப்பானதாகும். இறந்தவர்களுக்காக கூடி அழக்கூட உரிமை இல்லாதவர்களாக வாழ்வது உலகத்திலேயே நமது இனமாகத்தான் இருக்கமுடியும். இந்த தடைகளையும் தாண்டி நாம் எமது உறவுகளை எம்மால் இயன்றவரை தனிமையாகவோ, குடும்பங்களுடனோ , உறவினருடனோ இணைந்து நினைவுகூர முன்வர வேண்டும் என அழைப்பு விடுப்பதோடு தெற்கிலே சில அரசியல் தலைவர்கள் “உறவுகளை நினைவுகூரும் போர்வையில் விடுதலைப் புலி பயங்கர வாதிகளை நினைவுகூர முயற்சிப்பதாக” சாடுகின்றார்கள் அப்படியானால் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தில் இருந்து உயிர் நீத்தவர்களின் தாய் தந்தை, சகோதரங்கள், மனைவி பிள்ளைகள் ,உறவினர்களெல்லாம் எந்த நாட்டில் இருக்கின்றார்கள் ? அவர்கள் தமது பிள்ளையை கணவரை தந்தையை சகோதரனை நினைவுகூருவதை தடுப்பது எவ்வாறு மனிதப்பண்பாகும் எனவே போராளி பொதுமகன் என்ற பாகுபாடின்றி மடிந்த அத்தனை உயிர்களும் மதிப்பளிக்கப்பட்டு நினைவுகூரப்பட வேண்டுமென்பதே எமது நிலைப்பாடு இதுவே எஞ்சியுள்ள தமிழ் மக்களை நல்லிணக்கத்தை நோக்கி பயணிக்க வைக்கும் .
நன்றி .
ப.உதயாராசா
செயலாளர் நாயகம்
ஸ்ரீ ரெலோ
You can leave a response, or trackback from your own site.
Leave a Reply