மே 18ஐ உணர்வுபூர்வமாக நினைவுகூற அனைவரும் அணிதிரளவேண்டும் என சிறீரெலோ கட்சியினர் கோரிக்கை
எம்உறவுகள் கொன்றொழிக்கப்பட்ட நினைவுதினமான மே 18ஐ உணர்வுபூர்வமாக நினைவுகூற அனைவரும் அணிதிரளவேண்டும் என சிறீரெலோ கட்சியினர் கோரிக்கைவிடுத்துள்ளனர். 2009 ஆண்டு இறுதிகட்ட யுத்தத்தின் போது, எம் உறவுகள் கொத்துகொத்தாக கொன்றொழிக்கப்பட்ட நினைவு நாளாக, மே 18 நினைவுகூறப்பட்டுவந்தாலும் கடந்த கால ஆட்சியாளர்களால் பல தடைகள் விதிக்கப்பட்டு நினைவு கூறுபவர்கள் அச்சுறுத்தப்பட்டுவந்தனர்.ஆனால் புதிய ஆட்சியாளர்கள் இத்தினத்தினை நினைவுகூற அனுமதிவழங்கியிருப்பது நல்ல ஆரம்பமாகவே தெரிந்தாலும் எம் பிரச்சனைகளிற்கு தீர்வு இதுஅல்ல.
மே 18 வாரமானது தமிழர்களின் மனங்களில் என்றென்றும் நிலைத்திருக்கும்.அடைக்கலம் தேடி வந்தவர்கள் அடக்கப்பட்டு அழிக்கப்பட்ட காலமாகும்.இக்காலம் உலகம் கண்ட ஆறாத கொடுமையான காலமாகும்.எம்மவர்களின் நெஞ்சங்களில் அழியாதவடு.எத்தனை சந்ததிகள் வந்தாலும் அவர்களின் நெஞ்சங்களில் இந்த ரணம் இருக்கத்தான் போகின்றது.இந்நாளினை நினைவு கூறுவது ஒவ்வொறு தமிழனினதும் கடமையும் உரிமையுமாகும்.
எனவே எதிர்வரும் மே 18 அன்று எம் உறவுகளின் நினைவுநாளினை அரசியல் பேதங்களை மறந்து உணர்வுபூர்வமாக நினைவேந்தல்களை மேற்கொள்ள வேண்டும் என கோரிக்கை விடுப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இப்படிக்கு
077-1242732
ஊடகப்பிரிவு
சிறீரெலோ
யாழ்.மாவட்டம்
You can leave a response, or trackback from your own site.
Leave a Reply