எமது இராணுவ வீரர்களும் அனர்த்தங்களுக்கு முகம் கொடுப்பதற்கு தயாராக இருக்க வேண்டும் : ஜனாதிபதி மைத்திரி
நேபாளத்தைப் போன்று இலங்கையில் இயற்கை அனர்த்தங்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புக்கள் அதிகமாக இருப்பதாக எதிர்வுகூறல்கள் விடுக்கப்பட்ட வண்ணம் உள்ளன. ஆகவே் எமது இராணுவ வீரர்களும் அனர்த்தங்களுக்கு முகம்கொடுப்பதற்கு தயாராக இருக்க வேண்டும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். அத்தோடு பிராந்திய பாதுகாப்புக்கு இலங்கை இராணுவத்தின் ஒத்துழைப்பு அவசியம் என்றும் அவர் குறிப்பிட்டார். நேபாள அனர்த்தத்தில் பாதிக்கப்பட்டோருக்கு நிவா ரணம் அளிக்கும் நோக்கில் மேஜர் ஜெனரல் மைத்திரி டயஸ் தலைமையில் நேபாளம் பயணித்த இராணுவ வீரர்களை பாராட்டும் நிகழ்வு நேற்று அலரி மாளிகையில் இடம்பெற்ற போதே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் அங்கு குறிப்பிடுகையில்,
நேபாளத்தில் ஏற்பட்ட பூகம்பத்தினால் பாரியளவிலான சேதம் ஏற்பட்டது. இதன்போது முழு உலகமும் கண்ணீர் சிந்தியது. எனினும் இலங்கை இராணுவத்தினால் அந்த நாட்டிற்கு சென்று உதவிபுரியக் கூடிய நிலைமை உருவானது.
இலங்கை இராணுவத்தின் சேவையை தற்போது முழுச் சர்வதேசமும் பாராட்டுகிறது. 30 வருடகால யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வந்ததன் மூலமாக கௌரவம் பெற்றிருந்த இராணுவம் நேபாளத்திற்கு உதவி புரிவதற்குச் சென்றமையினால் சர்வதேசத்தின் கௌரவம் தற்போது எமக்கு கிடைக்கப்பெற்றுள்ளது.
மனிதன் மனிதனுக்குச் செய்யும் சேவை கள் என்றும் அழியாத வண்ணம் காணப்படும். ஆகவே நேபாளத்திற்கான எமது சேவை என்றும் அவர்களின் இதயங்களின் மீது பதிந்திருக்கும்.
இந்நிலையில் நாட்டில் இடம்பெற்ற 30 வருடகால யுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வந்து நாட்டின் பாதுகாப்பினை உறுதிப் படுத்தியதனை போன்று பிராந்திய பாதுகாப்பிற்கு எமது நாட்டின் இராணுவ வீரர்களின் பங்களிப்பு மிகவும் அவசியமாக உள்ளது.
ஆகவே சர்வதேச அளவில் எமது இராணுவம் வளர்ச்சி காண வேண்டும். அதேபோன்று நேபாளத்தைப் போன்று இலங்கையிலும் அனர்த்தங்கள் ஏற்படுவ தற்கான எதிர்வுகூறல்கள் விடுக்கப்பட்ட வண்ணம் உள்ளன. ஆகையால் இந்த அனர்த்தத்திற்கு முகங்கொடுக்க தயாராக வேண்டியுள்ளது என்றார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply