படைவீரர் ஞாபகார்த்த விழாவில் பொன்சேகா முதற்தடவை பங்கேற்பு
மாத்தறையில் நேற்றுக் காலை இடம்பெற்ற படைவீரர் ஞாபகார்த்த அணிவகுப்பு விழா பிரதான நிகழ்வில் முன்னாள் இராணுவத் தளபதியும். பாதுகாப்புப் படைகளின் முன்னாள் பிரதம அதிகாரியுமான பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா முதற் தடவையாக கலந்து கொண்டார். யுத்தம் முடிவுற்ற நிலையில் ஏற்கனவே ஐந்து ஆண்டுகள் யுத்த வெற்றி அணி வகுப்பு விழா என்ற பெயரில் நடாத் தப்பட்ட போதிலும் ஆறாவது வருடமாக இம்முறை நடைபெற்ற இந்த அணி வகுப்பு விழாவிலேயே அவர் முதற் தடவையாக கலந்து கொண்டார். அதேபோன்று பீல்ட் மார்ஷல் என்ற உயர் பதவி வழங்கப்பட்ட பின்னர் சரத் பொன்சேகா சம்பிரதாய உடையில் கலந்து கொண்ட முதலாவது அரச நிகழ்வும் இதுவாகும்.
2009 ஆம் ஆண்டு யுத்தம் முடிவுறும் போது இராணுவத் தளபதியாகவும் அதன் பின்னர் பாதுகாப்பு படைகளின் பிரதம அதிகாரியாகவும் பதவி வகித்து வந்த பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா, 2010 ஆம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலின் போது முன்னாள் ஜனாதி பதியை எதிர்த்து எதிரணியின் பொது ஜனாதிபதி வேட்பாளராக களமிறங் கியமையை அடுத்து இராணுவப் புரட்சிக்கு திட்டமிட்டார் என பல்வேறு குற்றஞ்சாட்டுக்கள் சுமத்தப்பட்டு கைது செய்யப்பட்டு சிறைவாசம் அனுபவித்து வந்தமையினால் அவர் கடந்த ஐந்து ஆண்டுகள் நடைபெற்ற படைவீரர் ஞாபகார்த்தமாக நடத்தப்பட்ட எந்த வைபவங்களிலும் கலந்து கொள்ள வில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, படை வீரர் ஞாப கார்த்த அணிவகுப்பு விழாவில் முன் னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டார நாயக்க குமாரதுங்க கலந்து கொண்ட மையும் இதுவே முதற் தடவை யாகும்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply